அரிகேசரி மாறவர்மன்
arikēcari māṟavarmaṉ
பாண்டிய மன்னர்களுள் ஒருவர்.
பாண்டிய மன்னர்களுள் ஒருவர். பாண்டிய மன்னன் செழியன் சேந்தனுக்கு மகன். சேந்தனது இறப்பிற்குப் பின்னர் மன்னர் ஆனார். வேள்விக்குடிச் செப்பேடுகள் இவர் வெற்றிகளை விரித்துக்கூறும். இவர் பாழி, நெல்வேலி, செந்நிலம், புலியூர் முதலான போர்க்களங்களில் பொருது வென்று வாகை சூடினார். சேரர், சாளுக்கியர், பரதவர், குறுநாட்டவர் முதலானோரை வென்றடிப்படுத்தினார். இரணியகருப்பம், துலாபாரம் முதலான மகாதானங்களைச் செய்தவர். சைவ சமய வரலாற்றில் இவர் கூன்பாண்டியன், நின்றசீர் நெடுமாறன் என்று குறிக்கப்பெறுகிறார். தொடக்கக் காலத்தில் இவர் சமணராக இருந்து பின்னர் ஞான சம்பந்தரால் சைவரானார் என்று பெரிய புராணம் கூறுகிறது. இவர் பாண்டிய அரசினை விரிவுபடுத்தினார்.ம.இரா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 774)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gnwbnzqv/
தமிழ்“அரிகேசரி மாறவர்மன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gnwbnzqv/APA
Oliyon Research. (2026). அரிகேசரி மாறவர்மன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gnwbnzqv/MLA
"அரிகேசரி மாறவர்மன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gnwbnzqv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment