உயிர்தோன்றல்
uyirtōṉṟal
ஒரு சொல்லிற்குள்ளே இரண்டு மெய்யொலிகள் சேர்ந்து வரும்போது அவற்றைச் சேர்ந்தாற்போன்று ஒலிப்பது சற்றுக் கடினமாக இருக்கலாம்.
ஒரு சொல்லிற்குள்ளே இரண்டு மெய்யொலிகள் சேர்ந்து வரும்போது அவற்றைச் சேர்ந்தாற்போன்று ஒலிப்பது சற்றுக் கடினமாக இருக்கலாம். அந்த இரண்டு மெய்யொலிகளுக்கும் நடுவில் ஒலிப்பதற்குத் துணையாக ஓர் உயிரொலியைச் சேர்த்தால் அப்போது ஒலிப்பது எளிமையாக இருக்கும். எடுத்துக்காட்டாக, கல்யாணம் என்ற சொல்லில் /ல்ய்/ என்ற இரண்டு மெய்யொலிகளுக்கு நடுவில் இகர ஒலியைச் சேர்த்துக் கலியாணம் என்று ஒலித்தலைக் கூறலாம். இங்ஙனம், ஒலிப்பதற்குத் துணையாக உயிரொலிகள் தோன்றுவதற்கு ஒலிப்புத்துணை / உயிர்தோன்றல் (Anaptyxis or Epenthesis) என்பது பெயர்.
ஒலிப்புத்துணை / உயிர்தோன்றல் பொதுவாகப் பல மொழிகளிலும் காணப்படுகின்றது.
சான்றுகள் வருமாறு:
::{|
மேற்கண்டவாறு வடசொற்களில் மட்டுமல்லாமல், தமிழ்ச் சொற்களிலும் ஒலிப்புத்துணை / உயிர் தோன்றல் காணப்படுகின்றது. சான்றுகள் வருமாறு:
ஒலிப்புத்துணை / உயிர்தோன்றலை சுரபக்தி (Swarabhakti) என்று வடமொழியிற் கூறுவர். சான்றுகள் வருமாறு:– indra → indara; darsata→darasata. மராட்டி போன்ற இக்கால இந்தோ – ஆரிய மொழிகளிலும் இதற்குச் சான்றுகள் உள. அவை வருமாறு: prakara → parakara; bhrama→bharama. இந்தோ–ஐரோப்பிய மொழிகளிற் காணப்படும் சான்றுகள் வருமாறு:
hebdmos → hebdomos (கிரேக்கம்); faclis→facilis, poclum → poculim (இலத்தீன்); nrav → norov (உருசியன்). அ.கா.
துணை நூல்கள்
Gune, P.D., An Introduction to Comparative Philology.
Robert, J., Jeffer & Ilas Lehiste, Principles and Methods for Historical Linguistics.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 974)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ggdbtsvb/
தமிழ்“உயிர்தோன்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ggdbtsvb/APA
Oliyon Research. (2026). உயிர்தோன்றல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ggdbtsvb/MLA
"உயிர்தோன்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ggdbtsvb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment