{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ggdbtsvb/", "data": {"id": "ggdbtsvb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ggdbtsvb/", "kind": "article", "headword": "உயிர்தோன்றல்", "romanization": "uyirtōṉṟal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:52.230693+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஒரு சொல்லிற்குள்ளே இரண்டு மெய்யொலிகள் சேர்ந்து வரும்போது அவற்றைச் சேர்ந்தாற்போன்று ஒலிப்பது சற்றுக் கடினமாக இருக்கலாம்.", "body_ta": "ஒரு சொல்லிற்குள்ளே இரண்டு மெய்யொலிகள் சேர்ந்து வரும்போது அவற்றைச் சேர்ந்தாற்போன்று ஒலிப்பது சற்றுக் கடினமாக இருக்கலாம். அந்த இரண்டு மெய்யொலிகளுக்கும் நடுவில் ஒலிப்பதற்குத் துணையாக ஓர் உயிரொலியைச் சேர்த்தால் அப்போது ஒலிப்பது எளிமையாக இருக்கும். எடுத்துக்காட்டாக, கல்யாணம் என்ற சொல்லில் /ல்ய்/ என்ற இரண்டு மெய்யொலிகளுக்கு நடுவில் இகர ஒலியைச் சேர்த்துக் கலியாணம் என்று ஒலித்தலைக் கூறலாம். இங்ஙனம், ஒலிப்பதற்குத் துணையாக உயிரொலிகள் தோன்றுவதற்கு ஒலிப்புத்துணை / உயிர்தோன்றல் (Anaptyxis or Epenthesis) என்பது பெயர்.\n\nஒலிப்புத்துணை / உயிர்தோன்றல் பொதுவாகப் பல மொழிகளிலும் காணப்படுகின்றது.\n\nசான்றுகள் வருமாறு:\n\n::{|\n\nமேற்கண்டவாறு வடசொற்களில் மட்டுமல்லாமல், தமிழ்ச் சொற்களிலும் ஒலிப்புத்துணை / உயிர் தோன்றல் காணப்படுகின்றது. சான்றுகள் வருமாறு:\n\nஒலிப்புத்துணை / உயிர்தோன்றலை சுரபக்தி (Swarabhakti) என்று வடமொழியிற் கூறுவர். சான்றுகள் வருமாறு:– indra → indara; darsata→darasata. மராட்டி போன்ற இக்கால இந்தோ – ஆரிய மொழிகளிலும் இதற்குச் சான்றுகள் உள. அவை வருமாறு: prakara → parakara; bhrama→bharama. இந்தோ–ஐரோப்பிய மொழிகளிற் காணப்படும் சான்றுகள் வருமாறு:\n\nhebdmos → hebdomos (கிரேக்கம்); faclis→facilis, poclum → poculim (இலத்தீன்); nrav → norov (உருசியன்). அ.கா.\n\nதுணை நூல்கள்\n\nGune, P.D., An Introduction to Comparative Philology.\n\nRobert, J., Jeffer & Ilas Lehiste, Principles and Methods for Historical Linguistics."}}