இன்கார்டன், உரோமன்
iṉkārṭaṉ, urōmaṉ
போலந்து நாட்டு இயற்காட்சியாளர்.
போலந்து நாட்டு இயற்காட்சியாளர். இவர் கிரேகோ (Cracow) என்ற கி.பி. 1893–ஆம் இடத்தில் ஆண்டு பிறந்தார். இலோவி (Lovy), காட்டின்சென் (Gottingean), பிரெய்பர்கு (Freiburg) ஆகிய இடங்களின் கல்வி பயின்று, சிறிது காலம் போலந்து நாட்டில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் அசுரல் (Heasserl) என்பவரின் இயற்காட்சிப் (Phenomenology) பள்ளி உறுப்பினராக இருந்து, அறிவு ஆராய்ச்சியியல் (Epistemology), உள்ளதன் இயன் (Ontological), அழகியல் சிக்கல்கள் (Aesthetic Problems) ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்துள்ளார்.
இவர் ஓர் எழுத்தாளர். போலந்து, செருமன் ஆகிய இரு மொழிகளிலும் பல நூல்கள் எழுதினார். இவர் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தக்கவை கருத்து முதற்கொள்கை (Idealism), உண்மைக் கொள்கை (Realism) ஆகியவையாகும்.
இவரது தத்துவம் அழகியல் (Aesthetics), உள்ளதன் இயல் (Ontology) ஆகியவை பற்றியது. இவர் அசுரலின் மொழிப் பகுப்பாய்வின் முடிவுகளையும் இயற்காட்சி முறையின் அமைப்பையும் ஏற்றுக் கொண்டு, கடந்த நிலைக் கருத்து முதற் கொள்கையை (Transcendental Idealism) மறுக்கிறார். இயற்காட்சிமுறை உண்மைக் கொள்கைக்கு (Realism) எவ்வாறு நடத்திச் செல்கிறது என்பதை இவர் விளக்கியுள்ளார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 555)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gfa33tgp/
தமிழ்“இன்கார்டன், உரோமன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gfa33tgp/APA
Oliyon Research. (2026). இன்கார்டன், உரோமன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gfa33tgp/MLA
"இன்கார்டன், உரோமன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gfa33tgp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment