செனிப்புத் தடச் சேதங்கள்
ceṉipput taṭac cētaṅkaḷ
விடபம், அல்குல். யோனி, கருப்பை ஆகியவை மகப் பேற்றின் போது சேதமடையும் குருதி உறை கட்டி, கூபக எலும்புச் சேதம், சிறுநீர்ப் புற வழிக்கும், யோனிக்கும் இடையேயான புரையோடிய புண், கருப்பைக் கிழிதல் ஆகியவையும் ஏற்படலாம்.
விடபம், அல்குல். யோனி, கருப்பை ஆகியவை மகப் பேற்றின் போது சேதமடையும் குருதி உறை கட்டி, கூபக எலும்புச் சேதம், சிறுநீர்ப் புற வழிக்கும், யோனிக்கும் இடையேயான புரையோடிய புண், கருப்பைக் கிழிதல் ஆகியவையும் ஏற்படலாம்.
விடபச் சேதம். வயது முதிர்ந்த தலைச் சூலிகளில் திசு நெகிழ் தன்மை இல்லாமையாலும், இடுக்கி கொண்டு சிசுவை வெளியே எடுப்பதாலும், குறுகிய, தட்டையான நசிந்த கூபகங்களில் தவறான மகப் பேறு முறையில் செய்வதாலும், விடபத்திற்குச் சேதம் ஏற்படலாம். மிகவும் மோசமான நிலைகளில் சிறுநீர்ப் புற வழிச் சுருக்குத் தசை, மலக் குடல், விடபத் தசைகள், யோனிச் சுவர் அனைத்துமே சேதமடைந்து விடும். இவற்றை, உடனடியாக அறுவை மூலம் சீர் செய்ய வேண்டும். யோனிக்குச் சேதம் ஏற்படும் போது, யோனிச் சுவர்கள் போதிய அளவு விரிவடைவதில்லை. அறுவை முறை மகப் பேறு, சிசுவின் மிகப் பெரிய தலை போன்றவை இதற்குக் காரணங்களாக அமைகின்றன. இதையும் அறுவை கொண்டு செம்மைப் படுத்தலாம்.
அல்குலிலும், யோனியிலும் குருதி உறை கட்டி. மகப் பேற்றில் குருதி நாளங்கள் கிழிந்து, குருதி தோல் அடித் திசுவில், குருதி உறை கட்டியை உண்டாக்கும். உறை கட்டியைக் கீறி விட்டு வெளியேற்றிச் சிதைந்த குருதி நாளங்களைச் செப்பனிட வேண்டும்.
கருப்பைக் கழுத்துக் கிழிதல். கடின மகப் பேற்றில் கருப்பைக் கழுத்துக் கிழிந்து, குருதிப் பெருக்கும் வலியும் உண்டாகும். பொதுவாக, இடப் பக்கமாகக் கிழிகிறது. அறுவை மூலம் கருப்பைக் கழுத்தை வெளியே இழுத்துத் தையலிட்டுச் சீர் செய்ய வேண்டும்.
கருப்பைக் கழுத்துக் கிழிவு. இது தானாகவோ, காரணமின்றியோ, அறுவைக் காயங்களாலோ, நிகழலாம். கருப்பைக் கிழிதலே மிகவும் சிக்கலாகும். குருதிப் பெருக்காலும், அதிர்ச்சியாலும், தாய் மரணமடையலாம். சோகை நோயும் உண்டாகிறது.
தடைப்பட்ட பேற்றில், தடையை எதிர்த்துக் கருப்பை முனைப்பாகச் சுருங்கி விரிகிறது. இதன் திட்பம் மெல்லியதாவதால், எளிதில் கிழிதல் ஏற்படுகிறது. இதற்கு முன் தடுப்பாக மருத்துவம் செய்வது நல்லது. கிழிதல் ஏற்பட்டு விட்டால், இதன் தன்மையைப் பொறுத்துச் செப்பனிடலாம் அல்லது அகற்றி விடலாம். கருப்பை உள் நோக்கித் திரும்புவதும், பூப்பிணைப்பு எலும்புகள் தனியாகப் பிரிந்து விடுவதும் அரிய சிக்கல்களாகும். அனைத்துக்கும் ஓய்வு, துயிலூட்டி, வலி நீக்கி, மருந்துகள் அளித்தல், அறுவை முறை என்பவை மருத்துவமாகும்.
—அ. கதிரேசன் நூலோதி. Bodyzhina, Text Book of Obstetrics, First Edition, Mir Publishers, Moscow, 1983.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 933)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gaxr9e4w/
தமிழ்“செனிப்புத் தடச் சேதங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gaxr9e4w/APA
Oliyon Research. (2026). செனிப்புத் தடச் சேதங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gaxr9e4w/MLA
"செனிப்புத் தடச் சேதங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gaxr9e4w/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment