ஆணவம்
āṇavam
பொருள்கள் · Senses
1.
செருக்கு, திமிர், மமதை
2.
அகங்காரம், ஆணவ மலம்
3.
வேறுபெயர்: பாசம்,மூலமலம், ஆணவமலம், சகசம். இயல்புகள்:1.அறிவை கேவல சகலநிலைகளில் மறைப்பது.அதாவது,அறியாமையை விளை விப்பது.இது இதன் தனிஇயல்பு 2. ஆற்றல் பல 3.அனைத்துத் துன்பத்திற்கும் காரணம் 4.இஃது ஒன்றே 5.இஃது உயிரின் பெற்றி அன்று: அதற்குப் பகையே 6.வீடுபேறு என்னும் நிலையில் மட்டும் நீங்குவது. 7 அனாதி அந்தம் அடையாது. இலக்கணம் - இது பொது, சிறப்பு என இருவகை முன்னதில் சகலத்தில் கருவிகளோடு கூடிய நிலையில் விபரீத உணர்வை உண்டாக்குவது பின்னதில் கேவலத்தால் உயிருக்கு அறியாமையை உண்டாக்குவது. உவமை - ஆணவம் உமி. மாயை தவிடு. கன்மம் முளை. வகை : மும்மலங்களில் முதல் I Dool)f D. ஆற்றல் ஆவாரகம், அதோ நியாமிகம் என்னும் இரு ஆற்றல்கள் உண்டு. முன்னது உயிர்களை மறைப்பது, இஃது ஆணவத்தின் தன்னியல்பு. பின்னது பிறவற்றோடு சேர்ந் துள்ள நிலை. முன்னது முழு இருள். பின்னது மங்கல் ஒளி. வன்மை மென்மை: ஆணவம் சகலரிடத்துப் பருமையாகவும் பிரளயாகலரிடத்து நுண் மையாகவும் விஞ்ஞானகலரிடத்து மிக நுண்மை யாகவும் இருக்கும். மல காரியங்கள் 7 : 1. மோகம் 2. மதம் 3, தாபம் 4 இராகம் 5. கவலை 6. வாட்டம் 7. விசித்திரம் மல காரியங்கள் 8:1 விகற்பம் 2. குரோதம் 3 மோகம் 4. கொலை 5 அஞர் 6, மதம் 7. நகை 8. விராய் (இஇ 4) கொள்கை ஆணவம் உண்டு என்பது உண்மை.அதற்குரிய பல வழக்குரைகளும் உள்ளன.ஆணவத்தோடு ஆன்மாஅத்து விதமாய் இருத்தல் பந்தம் எனப்படும்.அது நீங்கி இறைவனோடு அத்துவிதம் ஆதல் முத்தி எனப்படும். நீக்கம்:காரணகாரிய ஆராய்ச்சியாகிய நீரால் ஆணவமாகிய மலத்தைக் கழுவ வேண்டும். இதற்குத் திருவருள் துணை நாட வேண்டும்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g54ub7sw/
தமிழ்“ஆணவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g54ub7sw/APA
Oliyon Research. (2026). ஆணவம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/g54ub7sw/MLA
"ஆணவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g54ub7sw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment