உடைமை மீட்பு உரிமை
uṭaimai mīṭpu urimai
உடைமையை வேறொருவரிடம் கொடுத்தபோது தன்னுடன் நிறுத்தி வைத்துக் கொண்ட உரிமையின்படி உடைமையைத் திரும்பவும் எடுத்துக் கொள்ளும் உரிமை உடைமை மீட்புரிமை (Right of re-entry) எனப்படும்.
உடைமையை வேறொருவரிடம் கொடுத்தபோது தன்னுடன் நிறுத்தி வைத்துக் கொண்ட உரிமையின்படி உடைமையைத் திரும்பவும் எடுத்துக் கொள்ளும் உரிமை உடைமை மீட்புரிமை (Right of re-entry) எனப்படும். இத்தகைய உரிமை சாதாரணமாகக் குத்தகையில் இடம் பெற்றிருக்கிறது. சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 111, உட்பிரிவு (எ)–இன்படி, குத்தகை விடுபவர் குத்தகை எடுத்தவர் வெளிப்படையான நிபந்தனை ஒன்றினை மீறும்போது உரிமையை மீட்கலாம் என்ற உரிமையைப் பெற்றிருந்தால், இந்த உரிமையைச் செயற்படுத்தலாம். இத்தகைய நிபந்தனை சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 31–இன் படி, ஏற்கனவே இறங்கியுள்ள சொத்தை அல்லது உரிமையை இழப்பதற்குக் காரணமாகக் கூடிய பின் நிபந்தனை (Condition Subsequent) ஆகும்.
ஓர் உடைமை மீட்புரிமை இருக்கிறதென்றால், அதனுடன் பின்னடை உரிமை கொண்ட சொத்து ஒன்றும் இருக்கிறது என்பது பொருள். உடைமை மீட்பு உரிமை சொத்துரிமையுடன் இணைந்த ஒன்று. இந்த உரிமையை மட்டும் சொத்திலிருந்து தனியாகப் பிரித்தெடுத்து உரிமை மாற்றம் செய்ய முடியாது. ஆ.ச.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 827)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g4v3exd2/
தமிழ்“உடைமை மீட்பு உரிமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/g4v3exd2/APA
Oliyon Research. (2026). உடைமை மீட்பு உரிமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g4v3exd2/MLA
"உடைமை மீட்பு உரிமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/g4v3exd2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment