இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்
iḷaṅkōvatiyaraiyaṉāṉa māṟaṉ paramēcuvaraṉ
ஒரு முத்தரைய வேந்தன். இவன் கி.பி.
ஒரு முத்தரைய வேந்தன். இவன் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்தவன். இவனைப் பற்றிச் செந்தலைக் (தஞ்சை மாவட்டம்) கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இவன் செந்தலையை அடுத்துள்ள நியமத்தைத் தலைநகராகக் கொண்டு முத்தரையர் நாட்டினை ஆண்டவன்.
முதலாம் பெரும்பிடுகு முத்தரையனான குவாவன் மாறனின் மகன் இவன். இதனைக், ‘குவாவன் மாறனவன் மகன் இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்’ என்று செந்தலைக் கல்வெட்டு குறிப்பிடுவதினின்றும் அறியலாம். மாறன் என்னும் சொல் இவன் தந்தையைக் குறிப்பதாகவும், பரமேசுவரன் என்பது இவன் தலைவனான பல்லவ வேந்தன் முதலாம் பரமேசுவரனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
பல்லவரது மேலாண்மைக்குட்பட்டு, முத்தரையர் நாட்டினை ஆண்டு வந்த இவன். சோழரது எழுச்சியைத் தடை செய்து வந்ததுடன், பாண்டியர் பல்லவர்க்குட்பட்ட சோழநாட்டில் ஊடுருவா வண்ணம் தடுத்தும் வந்தான். க.ம.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 482)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g38p5sfj/
தமிழ்“இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/g38p5sfj/APA
Oliyon Research. (2026). இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g38p5sfj/MLA
"இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/g38p5sfj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment