{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g38p5sfj/", "data": {"id": "g38p5sfj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g38p5sfj/", "kind": "article", "headword": "இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்", "romanization": "iḷaṅkōvatiyaraiyaṉāṉa māṟaṉ paramēcuvaraṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:45.945709+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஒரு முத்தரைய வேந்தன். இவன் கி.பி.", "body_ta": "ஒரு முத்தரைய வேந்தன். இவன் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்தவன். இவனைப் பற்றிச் செந்தலைக் (தஞ்சை மாவட்டம்) கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இவன் செந்தலையை அடுத்துள்ள நியமத்தைத் தலைநகராகக் கொண்டு முத்தரையர் நாட்டினை ஆண்டவன்.\n\nமுதலாம் பெரும்பிடுகு முத்தரையனான குவாவன் மாறனின் மகன் இவன். இதனைக், ‘குவாவன் மாறனவன் மகன் இளங்கோவதியரையனான மாறன் பரமேசுவரன்’ என்று செந்தலைக் கல்வெட்டு குறிப்பிடுவதினின்றும் அறியலாம். மாறன் என்னும் சொல் இவன் தந்தையைக் குறிப்பதாகவும், பரமேசுவரன் என்பது இவன் தலைவனான பல்லவ வேந்தன் முதலாம் பரமேசுவரனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.\n\nபல்லவரது மேலாண்மைக்குட்பட்டு, முத்தரையர் நாட்டினை ஆண்டு வந்த இவன். சோழரது எழுச்சியைத் தடை செய்து வந்ததுடன், பாண்டியர் பல்லவர்க்குட்பட்ட சோழநாட்டில் ஊடுருவா வண்ணம் தடுத்தும் வந்தான். க.ம."}}