அரபுக் கதைகள்
arapuk kataikaḷ
அரபுக் கதைகள் என்பது பெரும்பாலும் காமச்சுவையும் பிறசுவைகளும் மிகுந்து, கற்பனை நயம் செறித்த பல கதைகளின் தொகுப்பாரும்.
அரபுக் கதைகள் என்பது பெரும்பாலும் காமச்சுவையும் பிறசுவைகளும் மிகுந்து, கற்பனை நயம் செறித்த பல கதைகளின் தொகுப்பாரும். இந்த நூல் அல்பு லைலா வலைலா அதாவது ஆயிரத்தொரு இரவுகள் என்றும் வழங்கப்பெறும். மேற்காசியாவிலுள்ள அரபு நாடுகளில் உருவாகிய இக்கதைகள் அலாவுதீன், அலிபாபா, சிந்துபாத் போன்ற கதைகளைப் போலவே, மேல்நாட்டு இலக்கிய உலகில் நன்கு அறிமுகமானவைகளாகத் திகழ்ந்தன. இக்கதைகள் உருவாகிய காலமும், இவற்றை உருவாக்கிய ஆசிரியரும் அறியக்கூடவில்லை. இக்கதைகளில் இடம் பெறும் முதன்மையான கதை மாந்தர்களின் பெயர்கள் ஈரானியச் சார்பினவாக இருந்தபோதிலும், கதைகளின் அடிப்படை இந்தியத் தன்மை வாய்ந்ததாக உள்ளது. பெயர்களுன் பெரும்பாலன அரபுப் பெயர்களாக அமைந்துள்ளன. கதை நிகழுமிடங்கள் இந்தியா, இவின், இவிக்கு, எகிப்து, கிரீசு ஆகிய நாடுகளைச் சார்ந்தனவாக உள்ளன. இது, ஆயிரம் கதை- கள் என்றும், ஆயிரத்தொரு இரவிற் சொல்லிய கதைகள் என்றும் கூறப்படும். இத்தொகுப்பில் ஆயிரம் என்ற பெயர் பொதுவாக மிகுதியை உணர்த்தும் எண்ணாகவே அமைந்தது. காலப்போக்கில் அந்த எண் கதைகளின் உண்மையான எண்ணினைக் குறிக்கும் எனக் கருதப்பட்டு, அந்த எண்ணிக்கை அளவு கதைகள் சேர்க்கப்பட்டன. தொடக்கத்தில் வாய்மொழியாக வழங்கப்பட்ட கதைகள், பின்னர்ப் பல காலங்களில் பலரால் எழுத்துவடிவம் தரப்பெற்றுத் தொகுக்கப்பெற்றதொரு கதைத் தொகுப்பே, அரபுக்கதைகள் என்று கருதப்படுகிறது. சக்ரெயார் என்னும் மன்னன் தன் மனைவியின் கூடா ஒழுக்கத்தைக் கண்டு மனத்துயருற்றுச் சினம்மிகக் கொண்டு அவளைக் கொலை செய்தான். எல்லாப் பெண்களும் இவ்வாறே ஒழுக்கமற்ற துரோகிகளாக இருப்பர் எனத் தவறாக அவன் முடிவு செய்தமையால், நிலையான மனைவி ஒருத்தியைக் கொள்ள விரும்பவில்லை. அதனால் நாடோறும் ஒரு பெண்ணை, மணந்து மனைவியாக்கி, அன்றிரவு அவளுடன் கூடியிருந்து, விடிவதற்குள் அவளைக் கொன்று விடுவதனை வழக்கமாகக் கொண்டான். இவனை அறிவுறுத்தித் திருத்தலாம் என்னும் உறுதியுடன், மந்திரியின் மகளான அழகுமிக்க சகர்சாத் என்பவள் மன்னனை மணந்து கொண்டாள். கதை கேட்பதில் ஆர்வமிக்கவன் என்பதனை உணர்ந்து, சுவை மிக்கதும் உணர்ச்சியைத் தூண்டத்தக்கதுமான ஒரு கதையினை இரவில் கூறத்தொடங்கி, விடியற்காலம் வரை கூறி, ஆர்வத்தைக் கவரும் ஒரு கட்டத்தில் கதையினை நிறுத்தினாள். மன்னன் கதை கேட்கும் அவாவில் கொலை செய்வதனை ஒத்தி வைக்கின்றான். மறுநாள் இரவு கதையினைத் தொடர்ந்து கூறி அவ்வாறே நிறுத்தினாள். இவ்வாறாக 1001 இரவுகள் தொடர்ந்து கதைகள் கூறிக் கொலை செய்யப்படுவதினின்றும் விடுபட்டாள். இக்கதைகன் உணர்த்திய நீதிகளால் உண்மை உணர்ந்த மன்னன். கொலை செய்யும் எண்ணம் நீங்கி, அப்பெண்ணையே தன் நிலைத்த மனைவியாகக் கொண்டான். இதுவே அரபுக்கதைகளின் அடிப்படையாகும்.
இக்கதைகள், தம் சுவையால் மேலைநாட்டு மக்கள் உள்ளங்களைக் கவர்ந்தமையால், இவை ஐரோப்பிய மொழிகளில் பெயர்க்கப்பட்டன. அண்டாயின் காலண்டு என்பவரால் இக்கதைத் தொகுப்பு நூல், முதன்முதலில் பிரஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. பத்துத் தொகுதிகளாக அமைந்த இந்த வெளியீடு, நான்கு பகுதிகள் கொண்ட சீரிய மொழிக் கையெழுத்து ஏட்டினின்றும் மொழிபெயர்த்து அமைக்கப்பட்டது. இதிலிருந்து அரபு மொழியில் திரும்பவும் இந்நூலை மொழி பெயர்த்தனர். இக்கதைத் தொகுப்பு நூல் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் இந்திய மொழிகளிலும் பெயர்த்து வெளியிடப்பட்டது. செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த அமரம்பேடு என்னும் ஊரில் வாழ்ந்த அண்ணாச்சாமி முதலியார் கி.பி. 1888–இல் இதனைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். பின்னர் இக்கதைகளைக் காரைக்குடி அ.லெ. நடராசன் நடைச் செப்பம் செய்து பல பகுதிகளாக வெளியிட்டுள்ளார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 757)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fter7a28/
தமிழ்“அரபுக் கதைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fter7a28/APA
Oliyon Research. (2026). அரபுக் கதைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fter7a28/MLA
"அரபுக் கதைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fter7a28/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment