அட்டிகா
aṭṭikā
அட்டிகா என்பது கிரீசு நாட்டின் மையத்தில் ஆதன்சு நகரைச் சுற்றியுள்ளதொரு பகுதி.
அட்டிகா என்பது கிரீசு நாட்டின் மையத்தில் ஆதன்சு நகரைச் சுற்றியுள்ளதொரு பகுதி. இப்பகுதி கிறித்தவ ஆண்டு தொடங்குவதற்கு முன்னரே இருந்ததெனக் கருதுகிறார்கள். அட்டிகா (Attica)வில் வாழ்ந்திருந்த பன்னிரு வகுப்புகளைத் தீசியசு (Theseus) என்பார் இணைத்துப் பண்டைக்கால ஆதன்சு நகரை நிலைநாட்டினார் என்பது மரபு வழியாக வரும் செய்தியாகும்.
அட்டிகா இன்றைய கிரீசில் நிருவாகப் பகுதிகளுள் ஒன்றாகும். இதன் பரப்பளவு 2380 ச.கி.மீ. இது பண்டைய அட்டிகாவின் பரப்பளவை விடப் பெரியது என்பர். இங்குக் கோதுமை, ஒலிவ எண்ணெய், திராட்சைச் சாற்றிலிருந்து உற்பத்தியாகும் மதுவகை, அத்திப்பழம் போன்றவை கிடைக்கின்றன. இதன் அண்மையிலுள்ள இலாவிரியானில் (Lavrion) ஈயம், துத்தநாகம், இரும்புத் தாதுகள் போன்றவை அகப்படுகின்றன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 219)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ftd4syv8/
தமிழ்“அட்டிகா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ftd4syv8/APA
Oliyon Research. (2026). அட்டிகா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ftd4syv8/MLA
"அட்டிகா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ftd4syv8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment