பூ

pū
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரம், செடி, கொடி, புல் முதலான நிலத்திணைகளில் காணப்படும் ஓர் உறுப்பு. இது பல்வேறு நிறங்களிலும், பல்வேறு மணங்கள் பரப்புவனவாகவும், பல்வேறு மென்மைகளுடன் காணப்படும். தன் இனத்தைப் பரப்ப, காயாகிப் பழமாகி விதைகள் உருவாக்கும் முன் சூல்கொள்ளும் உறுப்பு. மலர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பூ)
2.
நிறம், அழகு, கூர்மை, புட்பம், தாமரை, பொலிவு, மலர், பூமி, பட்டம், பிறப்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 305)
3.
கொடிப்பூ, கோட்டுப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 429)
4.
மலர், (குறள் 1313).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 174)
5.
தாமரைப் பூ, மலர் தூவி வழிபடுதல் மலரனைய உந்தி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 207)
6.
தாவரத்தின் உரு மாறிய தண்டகம். (தண்டு + இலை). இனப்பெருக்க உறுப்பு. நான்கு வட்டங்களைக் கொண்டது. பசுமையான புல்லிவிட்டம், நிறமுள்ள அல்லிவிட்டம், மகரந்தம் (ஆண்பகுதி), சூலகம் (பெண்பகுதி) — flower
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 167)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fstss3vm/

தமிழ்
“பூ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fstss3vm/
APA
Oliyon Research. (2026). பூ. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fstss3vm/
MLA
"பூ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fstss3vm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment