செம்புனலலைத் துணி
cempuṉalalait tuṇi
தெளிவாக அலைகளைப் போன்று தோற்றமளிக்கும் ஈரத் துணிகள் செம்புனலலைத் துணி (moire) எனப் படும்.
தெளிவாக அலைகளைப் போன்று தோற்றமளிக்கும் ஈரத் துணிகள் செம்புனலலைத் துணி (moire) எனப் படும். துணியின் மேற்பரப்பிலுள்ள பல பகுதிகளிலிருந்து, ஒளி எதிர்பலிப்பதால் (reflection), இது அலைத் தோற்றம் பெறுகிறது. பட்டு, பருத்தி, ரேயான் இழைகளால், இவை பெரும்பான்மையாகத் தயாரிக்கப் படுகின்றன. இதில் முகப்பு நூல்கள், மிக நெருக்கமாக அமைக்கப்படுகின்றன. ஆனால், நேராக நூல்கள் விறைப்பாகவும், கடினமாகவும் காணப்படும். ஒரே தரமுள்ள இரு துணிகளையோ, ஒரே துணியையோ இரண்டாக மடித்து, நேருக்கு நேராக வைத்து ஈரமாக்கி, இரு வெப்ப உருளைகளுக்கிடையே அழுத்தம் கொடுக்கப் படுகிறது. இதுவே வழக்கமாகச் செய்யப் படும் ஈரமாக்கும் செயல் முறையாகும்.
நுணிகளிலுள்ள இரு மேல் வரிகள் (rib) ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பின், மேற் பரப்பிலுள்ள நூல்கள் தட்டையாகக் காணப்படும்; ஆனால், ஒரு துணியிலுள்ள மேல் வரி அடுத்த துணியிலுள்ள மேல் வரிக்கிடையே வந்தால், நூல்கள் வட்டமாகக் காணப்படும். எதிர்ப் பக்கங்களிலிருந்து நோக்கினால், இத்துணி அடர் மற்றும் வெளிர் நிழல்களை மாறி, மாறிக் காட்டுகிறது. இதில், முற்றிலும் வேறுபட்ட வடிவமைப்புக் காணப்படும். மற்றொரு முறையில், துணியின் மேற்பரப்பை ஓர் உருளை செயல் படுத்துவதால், துணியில் தேவையான அலை வடிவமைப்புப் பதிக்கப் படுகிறது. இத்துணிகளிலுள்ள நேரான நூல்களுக்கு மெருகூட்டப் பட்ட பருத்தி இழைகள், கடினமாக இருப்பதால் பயன் படுகின்றன. இவை அழுத்த உருளைகளின் செதுக்கச் செயல்பாட்டைத் தாக்கி, தெளிவான அலை நெளிவு தோற்றம் ஏற்பட உதவுகின்றன. —இரா. சரசவாணி நூலோதிZ. Grosicki, Watson's Textile Design and Colour, Seventh Edition, Butterworth and Co Ltd., London, 1975.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 764)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fr9pz6bb/
தமிழ்“செம்புனலலைத் துணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fr9pz6bb/APA
Oliyon Research. (2026). செம்புனலலைத் துணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fr9pz6bb/MLA
"செம்புனலலைத் துணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/fr9pz6bb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment