நுண்மையான, இலேசான, சாதா நெசவு வகைத் துணி, செவிலி மென் துணி (nun's veiling) ஆகும். இத்துணி முன்பு பெண்களின் முகத் திரையாகப் பயன் பட்டது. தற்போது, குழந்தைகளுக்கான ஆடைத் தயாரிப்பில் பயன் படுகிறது. பொதுவாக, ஒரே வண்ணத்தில் தயாரிக்கப் படும் இத்துணி, தொடக்கத்தில் கம்பளி நூலால் மட்டும் நெய்யப் பட்டு வந்தது. தற்போது செயற்கை இழைகளும், இதற்குப் பயனாகின்றன. லினோ அல்லது வலையமைவு நெசவினால் தயாரிக்கப்படும் கிரெனடீன் (grenadine). மார்க்விசெட் (marquisette), காசமெர் (gossamer) ஆகியனவும் செவிலி மென் துணியாகக் கருதப் படுகின்றன. —மே. ரா. பாலசுப்பிரமணியன்