உறுதியான பொருளில் உள்ள எல்லாத் துகள்களும், நிலையான ஓர் அச்சை மையமாகக் கொண்டு, பொதுவான கோணத் திசை வேகத்துடன் வட்டமான பாதைகளில் இயங்குவது சுழல் இயக்கம் (rotational motion) எனப்படுகிறது. வெளியில் உள்ள புள்ளியை மையமாகக் கொண்ட வட்டப் பாதையில் துகள்கள் இயங்கினாலும், அது சுழல் இயக்கமே ஆகும், புவி தனது அச்சைச் சுற்றி, மாறாத சுழல் வேகத்துடன் சுழலுவது, சுழல் வேகமும், சுழல் அச்சிலிருந்து உள்ள தொலைவும் மாறுகிற வகையில், ஒரு கோளை ஒரு துணைக் கோள் சுற்றி வருவது, கோணத் திசை வேகம் மாறாததாயும், வட்டப் பாதையின் ஆரம் மாறுவதாயும் இருக்கிற வகையில், சுழல் முடுக்கியில் (cyclotron) அயனிகள் சுற்றி வருவது, வட்டத்தின் வில்லில் அலைவு செய்யும் தனி ஊசலின் இயக்கம் ஆகியவை பல தரப்பட்ட சுழல் இயக்கங்களுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும், கோணத் திசை வேகம் மாறாமல் இருக்குமானால், அது சீரான வட்ட இயக்கம் எனப்படும். ஒரு துகளின் கோணத் திசை வேகம் ω எனில், t நொடிகளில் அது அடைந்த கோண இடப்பெயர்ச்சி θ = ωt. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> கோணத் திசை வேகம் மாறிக் கொண்டேயிருந்தால், துகளின் இயக்கம் சீரற்ற வட்ட இயக்கம் ஆகும். சிறப்பு நிலையாகச் சீரான கோண முடுக்கத்துடன், ஒரு துகள் வட்டப் பாதையில் இயங்கக் கூடும். ஒரு வட்டப் பாதையில் இயங்குகிற ஒரு துகளின் கோண முடுக்கம் α ரேடியன்/நொடி² எனவும், ஒரு குறிப்பிட்ட. கணத்தில், அதன் கோணத் திசை வேகம் ω₀ எனவும் கொள்ளலாம். t நொடி கழித்து அதன் கோணத் திசை வேகம் ω எனில், ω = ω₀ + t, கோண இடப் பெயர்ச்சி θ = ω₀t + ½αt² வட்டப் பாதைகளில் சரிவு கொடுத்தல். ஓர் உந்து வளைவான சாலையில் திரும்பும் போது, அந்த வளைவின் மையத்தை நோக்கிய ஒரு வெளி விசையை உந்தின் மேல் செலுத்த வேண்டும். அப்போது, அதில் ஒரு மையம் நோக்கிய முடுக்கம் ஏற்படும். இந்த விசை Mν²/Rக்குச் சமமாக இருக்க வேண்டும். இதில், M என்பது உந்தின் நிறை, ν என்பது அதன் திசை வேகம், R என்பது வளைந்த சாலையின் வளைவு ஆரம். இந்த விசையை உந்தின் சக்கரங்களுக்கும், சாலைக்கும் இடையில் தோன்றுகிற உராய்வு அளிக்கிறது. இந்த முடுக்கத்தை அளிக்கக் கூடிய அளவில் உராய்வு இல்லா விட்டால், உந்து வளைவில் திரும்பாமல், நேராகச் சென்று சாலையை விட்டு வெளியே போய் விடும். வளைவுப் பாதையில் செல்லும் உந்துகள் சறுக்காமல் இருப்பதற்காகச் சாலையின் வெளிப்புறங்கள் மேடாக்கப்பட்டுச் சரிவு கொடுக்கப்படுகின்றன. படத்தில் M நிறையுள்ள உந்து ν திசை வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது, வலப் பக்கமாகத். திரும்பி R ஆரமுள்ள வளைவான பாதையில் செல்வதைக் காணலாம். அதன் எடையான w = Mgக்குச் சமமான எதிர்த் திசையில் உள்ள ஒரு மேல் நோக்கிய எதிர் விசையைச் சாலை, உந்தின் மேல் செலுத்துகிறது. கிடைத் திசையிலான ஒரு மைய நோக்கு விசை உந்தை வளைந்த பாதையில் செல்லும்படிச் செய்கிறது. சாலை உந்தின் மேல் செலுத்தும் நிகர விசை, இந்த இரு விசைகளின் வெக்ட்டார் கூட்டுத் தொகை ஆகும். படத்திலிருந்து, இந்த நிகர விசைக்கும், செங்குத்துத் தளத்திற்கும் இடையில் உள்ள கோணம், tanθ = = ν²/Rg என்பதைக் காணலாம். சாலை கிடைத் தளத்திற்கு θ கோணத்தில் சாய்ந்திருக்குமானால், N என்னும் விசை, சாலையின் தளத்திற்குச் செங்குத்தாக அமைந்து விடும். அப்போது, சறுக்கல் ஏற்படாது. சறுக்கலைத் தவிர்ப்பதற்காகச் சாலை சாய்ந்திருக்க வேண்டிய கோணம், உந்தின் திசை வேகத்தின் இரு மடிக்கு நேர் விகிதத்திலும், சாலையின் வளைவு ஆரத்திற்குத் தலை கீழ் விதத்திலும் அமைந்திருப்பதைக் காணலாம். ஒரு குறிப்பிட்ட வளைவுள்ள சாலையில் செல்லும் உந்துகளில் சராசரி வேகத்திற்கு ஏற்றவாறு, சரிவு கோணங்கள் அமைக்கப் படுகின்றன. இருப்புப் பாதைகளை வடிவமைக்கும் போதும், பறந்து கொண்டிருக்கிற ஆகாய விமானங்கள் திரும்பும் போதும், சரிவு கோணங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். செயலும் திறனும். ஒரு சுழலும் பொருளுக்கு ½Iω² என்ற சுழற்சி இயக்க ஆற்றல் உண்டு. இதில், ω என்பது கோணத் திசை வேகம். I என்பது நிலைமத் திருப்புத் திறன். இது கோண முடுக்கத்திற்குச் சுழலும் பொருள் காட்டுகிற எதிர்ப்பின் அளவு ஆகும். ஒரு சுழலும் பொருளுக்கு, இயக்க ஆற்றலை அளிக்கச் செயல் செய்யப்பட வேண்டும். படத்தில் m நிறையும், R ஆரமும் உள்ள ஒரு திண்ம உருளை காட்டப்பட்டிருக்கிறது. அது θ என்ற புள்ளியில் படத்தின் தளத்திற்குச் செங்குத்தாக உள்ள ஓர் அச்சைப் பொறுத்து உராய்வு இன்றிச் சுழலக் கூடியது. அதன் மேல் F என்ற ஒரு சீரான விசையைச் செலுத்திச் சுழல வைத்தால், அதில் உள்ள P என்ற புள்ளி S என்ற தொலைவைக் கடந்து P’ என்ற இடத்தை அடைய, உருளை θ என்ற கோணத்தில் திரும்பியிருக்கும். இப்போது, விசை செய்த செயல் w= FS = FRθ = Lθ, L = FR என்பது சுழல் விசையிரட்டைத் திருப்புத் திறன் (torque) எனப்படும். இது α என்ற கோண முடுக்கத்தைப் பின்வருமாறு உண்டாக்கும். நிலைமத் திருப்புத் திறன், கோணத் திசை வேகம் ஆகியவற்றின் பெருக்குத் தொகையான Iω. சுழலும் பொருளின் கோண உந்தம் எனப்படும், மேற்காணும் சமன்பாட்டிலிருந்து ஒரு சுழலும் பொருளின் கோண உந்தமும், அதன் கோணத் திசை வேகமும் வெளி விசையிரட்டை தாக்காமலிருக்கும் வரை மாறா எனத் தெரிகிறது. L என்ற சுழல் விசையிரட்டை, ஓய்வு நிலையில் இருக்கிற ஒரு பொருளை θ கோணத்தில் சுழற்றும் போது செய்யப்பட்ட வேலை: center|larger|W = L\theta = I\alpha\theta = I\alpha^{\frac{1}{2\alpha t^2 = {\frac{1}{2I\alpha^2 t^2 = {\frac{1}{2I \omega^2 இது சுழற்சியின் இயக்க ஆற்றலுக்குச் சமமாக இருப்பதைக் காணலாம். ஒரு நொடியில் செய்யப்பட்ட செயலின் அளவு திறன் எனப்படும். சுழற்சி இயக்கத்தின் திறன் P எனில், center|larger|P = \frac{dW}{dt} = \frac {d}{dt}({L\theta}) = L \frac{d\theta}{dt} = L\omega —கே. என். ராமச்சந்திரன் நூலோதி. H.E. White, Modern College Physics, Van Nostrand Company, Inc. Affiliated East-West Press. Pvt. Ltd., New Delhi, 1963.