ஆதாளை
ātāḷai
எலி ஆமணக்கு எனவும்படும். இது கடற்கரையை யடுத்த இடங்களில் நிரம்ப வளர்ந்திருக்கும்.
எலி ஆமணக்கு எனவும்படும். இது கடற்கரையை யடுத்த இடங்களில் நிரம்ப வளர்ந்திருக்கும். இதை வேலிச் செடியாக வைப்பதுண்டு. இது காட்டாமணக்குப் போலவே இருக்கும். அதுதானோ என்று எண்ணுவதுமுண்டு. ஆனால் இதன் இலை பச்சையாக இருக்கும். இலையடிச் செதில்கள் நீண்டு பிரிவுபட்டு இருக்கும். பிரிவுகளின் முனையில் சுரப்பிகள் இருக்கும். இலை அரவாய் விளிம்புள்ளது. விளிம்பிலும் முனையிலும் சுரப்பிகள் இருக்கும். பூக்கள் மஞ்சள் கலந்த பச்சை நிறமானவை. இலையிலிருந்து துணிகளுக்குப் போடும் பச்சைச் சாயம் எடுக்கிறார்கள். விதையிலிருந்து எடுக்கும் எண்ணெய் கீல்வாதம், குடைச்சல், பாரிசவாயுவு ஆகியவற்றுக்குப் பயன்படும்.
குடும்பம்: யூபோர்பியேசீ (Euphorbiaceae); இனம்: ஜட்ரோபா கிளாண்டுலிபெரா (Jatropha glandulifera).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 414)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f7wjr84c/
தமிழ்“ஆதாளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f7wjr84c/APA
Oliyon Research. (2026). ஆதாளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f7wjr84c/MLA
"ஆதாளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f7wjr84c/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment