பெத்தமுத்திப்பயன்கள்

pettamuttippayaṉkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெத்தம், முத்தி ஆகிய இரண்டிலும் உயிர்கள் உணரும் பொருளை இறைவனும் உடன் நின்று உணரினும், பெத்த காலத்தில் உயிர் இறைவனை உணர்வதில்லை. எல்லாவற்றையும் அது தானே அறிவதாகவும் செய்வதாகவும் கருதுகிறது. அதனால், அப்பொழுது, இறைவன் அவ்வுயிர்களேயாய்த் தான் தோன்றாமல் நிற்கின்றான். அதனால் அப்பொழுது உண்டாகும் விளைவுகள் எல்லாம் உயிர்களுக்கே உரியன. முத்திக் காலத்தில் அதற்கு நேர் மாறாக உயிர்கள் தம்மையும் தமது அறிவு விழைவுச் செயல்களையும் சிறிது உணராமல் எவ்விடத்தும் இறைவனையே உணர்ந்து நிற்றலால், அப்பொழுது ஏற்படும் விளைவுகளில் இறைவனது எல்லையிலா இன்பத்தைத் தவிர, ஏனைய யாவும் இறைவனுடையதாகவே ஆகின்றன. ஆகவே, பெத்த நிலையில் உயிர்கள் வினைகளால் தாக்கப்படுதலும், முத்தி நிலையில் வினையில் தாக்கப்படாமலும் இருக்கும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 210)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f7s5s6uq/

தமிழ்
“பெத்தமுத்திப்பயன்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f7s5s6uq/
APA
Oliyon Research. (2026). பெத்தமுத்திப்பயன்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f7s5s6uq/
MLA
"பெத்தமுத்திப்பயன்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f7s5s6uq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment