நேர் மாறு அணி
nēr māṟu aṇi
ஓர் அணியில் உள்ள நிறைகளின் எண்ணிக்கையும், நிரல்களின் எண்ணிக்கையும் சமமாக இருந்தால், இவ்வணி ஒரு சதுர அணி (Square matrix) எனப் படும்.
ஓர் அணியில் உள்ள நிறைகளின் எண்ணிக்கையும், நிரல்களின் எண்ணிக்கையும் சமமாக இருந்தால், இவ்வணி ஒரு சதுர அணி (Square matrix) எனப் படும். A என்னும் ஒரு சதுர அணிக்கு B என்னும் அதே வரிசையுடைய ஒரு சதுர அணி, AB = BA=I என்னும் நிபந்தனைக்குட் பட்டு அமைந்திருக்குமானால், B என்பது, அணி Aஇன் நேர் மாற்று அணி (inverse matrix) ஆகும். நேர் மாற்று அணி A-1 எனக் குறிப்பிடப் படும். அதாவது B= A-1 என்பதாகும். மேலும், ஒவ்வோர் அணிக்கும், நேர்மாறு அணி ஒன்றே ஒன்றுதானிருக்கும். A, B என்பன ஒரே வரிசையையுடைய இரண்டு பூஜ்யமில் கோவை அணிகள் ஆனால், (AB)-1= B-1A-1 என்றிருக்கும். மேலும் A ஒரு பூஜ்யமில் கோவை அணி ஆயின், (A-1) -1= A ஆகும். —பங்கஜம் கணேசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 233)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f79kazgf/
தமிழ்“நேர் மாறு அணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f79kazgf/APA
Oliyon Research. (2026). நேர் மாறு அணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f79kazgf/MLA
"நேர் மாறு அணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f79kazgf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment