{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f79kazgf/", "data": {"id": "f79kazgf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f79kazgf/", "kind": "article", "headword": "நேர் மாறு அணி", "romanization": "nēr māṟu aṇi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:03.663421+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஓர் அணியில் உள்ள நிறைகளின் எண்ணிக்கையும், நிரல்களின் எண்ணிக்கையும் சமமாக இருந்தால், இவ்வணி ஒரு சதுர அணி (Square matrix) எனப் படும்.", "body_ta": "ஓர் அணியில் உள்ள நிறைகளின் எண்ணிக்கையும், நிரல்களின் எண்ணிக்கையும் சமமாக இருந்தால், இவ்வணி ஒரு சதுர அணி (Square matrix) எனப் படும். A என்னும் ஒரு சதுர அணிக்கு B என்னும் அதே வரிசையுடைய ஒரு சதுர அணி, AB = BA=I என்னும் நிபந்தனைக்குட் பட்டு அமைந்திருக்குமானால், B என்பது, அணி Aஇன் நேர் மாற்று அணி (inverse matrix) ஆகும். நேர் மாற்று அணி A-1 எனக் குறிப்பிடப் படும். அதாவது B= A-1 என்பதாகும். மேலும், ஒவ்வோர் அணிக்கும், நேர்மாறு அணி ஒன்றே ஒன்றுதானிருக்கும். A, B என்பன ஒரே வரிசையையுடைய இரண்டு பூஜ்யமில் கோவை அணிகள் ஆனால், (AB)-1= B-1A-1 என்றிருக்கும். மேலும் A ஒரு பூஜ்யமில் கோவை அணி ஆயின், (A-1) -1= A ஆகும். —பங்கஜம் கணேசன்"}}