வேற்றணு வளையச் சேர்மங்களான பிரிடீன், கினோலின், ஐசோகினோலின் போன்றவை ஒரு வித வேதி வினைக்கு உட்படும் போது, அவற்றின் பிரிடீன் வளையத்தில் நேரடியாக அமினோ தொகுதி புகுத்தப்படுகிறது. இவ்வினை அந்தச் சேர்மத்தைச் சோடியம் அமைடுடன் சேர்த்து 100°C வெப்ப நிலைக்குச் சூடுபடுத்தும் போது நடைபெறுகிறது. இவ்வேதி வினைக்கு டொலூயீன், கரைப்பானாகப் பயன்படுகிறது. மேலே குறிப்பிட்ட வினைகள் அனைத்தும் சிச்சிபாபின் வினைக்கு எடுத்துக்காட்டுகளாகும். இவ்வினை குறித்துப் பின் வரும் கருத்துகள் கவனத்தில் கொள்ளத் தக்கவை: அ) மேலே உள்ள எடுத்துக்காட்டுகளில் காட்டியவாறு இரண்டு அல்லது நான்காம் கார்பன் அணுக்களின் இடங்களிலேயே தாக்குதல் நடைபெறும். ஆ) இந்த வேதி வினை கருக்கவர் பதிலீட்டு (nucleophilic substitution) வினைக்கு எடுத்துக்காட்டாகும். இ) சோடாமைடுக்குப் பதிலாகப் பொட்டாசியம் அமைடு பயன்படுத்தலாம். மேலும் கார—உலோக அமைடுகளின் பெறுதிகளைப் பயன்படுத்தலாம். எ.கா. சோடியம் பிப்பிரிடைடு, ஈ) நைட்ரோ சேர்மங்கள் (எ.டு: நைட்ரோபென்சீன்) சிச்சிபாபின் வேதி வினைக்கு உட்படுவதில்லை. உ) பிரிடீன் தரும் சிச்சிபாபின் வேதி வினையைச் சான்றாகக் கொண்டு, இவ்வினையின் வழிமுறையை (mechanism) விளக்கலாம். Na + Η ⟶ NaH (NaNHவிலிருந்து) ⟶ (சோடியம் ஹைட்ரைடு) —எ. இரத்தினசபாபதி