அலூசன் தீவுகள்
alūcaṉ tīvukaḷ
வட அமெரிக்காவில் அலாசுகா முந்நீரக ஓரத்திலிருந்து மேற்காகப் பரவியுள்ள எரிமலைத் தொடர் கொண்ட தீவுகள் ஆகும்.
வட அமெரிக்காவில் அலாசுகா முந்நீரக ஓரத்திலிருந்து மேற்காகப் பரவியுள்ள எரிமலைத் தொடர் கொண்ட தீவுகள் ஆகும். இங்குள்ள மலைத்தொடர் 1400 கி.மீ. பரவி உள்ளது. தீவுகளில் தென்படும் மலைகள் அலாசுகா மலைத் தொடரின் பகுதியாகும். அலுாசன் தீவுகள் (Aleutian Islands) பாகமாக இருந்து பேரிங் நீர்ப்பிரிவினைப் பசிபிக்குப் பெருங்கடலிலிருந்து பிரிக்கின்றன. இவை 14 பெருந் தீவுகளையும் 55 சிறு தீவுகளையும் வேறு பல சிறு சிறு தீவுத் திடல்களையும் கொண்டன. இத்தீவுகளின் மொத்தப் பரப்பு 17,552 ச.கி.மீ. இவை ஆர்க்டிக்கு வட்டத்திற்குத் தெற்கில் 1300–இலிருந்து 1600 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. இங்குப் பல வெந்நீர் ஊற்றுகள் உள்ளன. மர வகைகள் வளராத இத்தீவுகளில் சிறு புதர்கள், மலர்கள், புற்கள், பாசிகள் போன்றவை செழித்து வளருகின்றன. மீன் பிடித்தல், சிறப்புத் தொழில். கீழ் மேலாக அலூசன் தீவுகளை ஐந்து பிரிவுகளாகப் பிரிப்பர். அவை 1. பாக்சுத் தீவுகள் 2. நான்மலைத் தீவுகள் 3. ஆந்திரியானோப்புத் தீவுகள் 4. எலித்தீவுகள் 5. அருகிலிருக்கும் தீவுகள்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 879)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/erxuudsu/
தமிழ்“அலூசன் தீவுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/erxuudsu/APA
Oliyon Research. (2026). அலூசன் தீவுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/erxuudsu/MLA
"அலூசன் தீவுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/erxuudsu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment