{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/erxuudsu/", "data": {"id": "erxuudsu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/erxuudsu/", "kind": "article", "headword": "அலூசன் தீவுகள்", "romanization": "alūcaṉ tīvukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:39.625492+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "வட அமெரிக்காவில் அலாசுகா முந்நீரக ஓரத்திலிருந்து மேற்காகப் பரவியுள்ள எரிமலைத் தொடர் கொண்ட தீவுகள் ஆகும்.", "body_ta": "வட அமெரிக்காவில் அலாசுகா முந்நீரக ஓரத்திலிருந்து மேற்காகப் பரவியுள்ள எரிமலைத் தொடர் கொண்ட தீவுகள் ஆகும். இங்குள்ள மலைத்தொடர் 1400 கி.மீ. பரவி உள்ளது. தீவுகளில் தென்படும் மலைகள் அலாசுகா மலைத் தொடரின் பகுதியாகும். அலுாசன் தீவுகள் (Aleutian Islands) பாகமாக இருந்து பேரிங் நீர்ப்பிரிவினைப் பசிபிக்குப் பெருங்கடலிலிருந்து பிரிக்கின்றன. இவை 14 பெருந் தீவுகளையும் 55 சிறு தீவுகளையும் வேறு பல சிறு சிறு தீவுத் திடல்களையும் கொண்டன. இத்தீவுகளின் மொத்தப் பரப்பு 17,552 ச.கி.மீ. இவை ஆர்க்டிக்கு வட்டத்திற்குத் தெற்கில் 1300–இலிருந்து 1600 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. இங்குப் பல வெந்நீர் ஊற்றுகள் உள்ளன. மர வகைகள் வளராத இத்தீவுகளில் சிறு புதர்கள், மலர்கள், புற்கள், பாசிகள் போன்றவை செழித்து வளருகின்றன. மீன் பிடித்தல், சிறப்புத் தொழில். கீழ் மேலாக அலூசன் தீவுகளை ஐந்து பிரிவுகளாகப் பிரிப்பர். அவை 1. பாக்சுத் தீவுகள் 2. நான்மலைத் தீவுகள் 3. ஆந்திரியானோப்புத் தீவுகள் 4. எலித்தீவுகள் 5. அருகிலிருக்கும் தீவுகள்."}}