சூரிய முகப்புக் காட்டி
cūriya mukappuk kāṭṭi
சூரியனின் உதவி கொண்டு, நேரத்தை அளக்க உதவும் கருவிக்குச் சூரிய முகப்புக் காட்டி (sun dial) என்று பெயர்.
சூரியனின் உதவி கொண்டு, நேரத்தை அளக்க உதவும் கருவிக்குச் சூரிய முகப்புக் காட்டி (sun dial) என்று பெயர். இதில் ஒரு முகப்புத் தகடு உள்ளது. இத்தகட்டில் மணியைக் குறிக்கும் கோடுகள் (hour line) வரையப்பட்டிருக்கும். இத்தகட்டில் கூர் முனைக் கம்பி (style) ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இக்கம்பியின் நிழல், மணியைக் குறிக்கும் கோடுகளின் மீது விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இக்கூர் முனைக் கம்பி புவியின் அச்சுக்கு இணையாக உள்ளது. சூரியனின் இயக்கம் விண்ணுக்குரிய நடு வட்டக் கோட்டிலேயே (celestial equator) எப்போதும் உள்ளது என்னும் கருது கோள் அடிப்படையிலேயே முகப்புத் தகட்டிலுள்ள மணியைக் குறிக்கும் கோடுகள் வரையப்பட்டுள்ளன. சூரிய முகப்புக்காட்டி எந்தவொரு வடிவத்திலும், எந்தவொரு பரப்பிலும் அமைக்கப்படுகிறது. அது நிலையானதாகவும், பெரியதாகவும் அல்லது சிறியதாகவும், எடுத்துச் செல்லக் கூடியதாகவும் இருக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் பயன்படுத்தும் வகையிலும் அமைக்கப்படலாம். கிடை மட்ட முகப்புக் காட்டியே பெரும்பான்மையாகப் பயன்படும் வகையாகும். இவ்வகை, அவ்விடத்தின் நிலைப்படுத்தப் பெறாத நேரத்தைக் (local apparent time) காட்டும். இது சூரிய நேரம் (sun time) எனப் படும். ஏனைய வகைச் சூரிய முகப்புக் காட்டிகள், அவ்விடத்தின் இடைநேரத்தையும் (mean time) அனைவராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட தரப் படியான நேரத்தையும் (standard time) காட்டுகின்றன.
உயர் தரமான சூரிய முகப்புக் காட்டிகள் இயல் வண்ண நிழற் படப் பதிவுக் கருவிகளில் (heliochrono meter) அமைக்கப்பட்டுள்ளன. இக்கருவிகள் நிலையான நேரத்தை மிகத் துல்லியமாகக் காட்டுகின்றன. இக்கருவியின் வடிவமைப்பிற்கு நேரச் சமன்பாடு (equation of time), அக்கருவி பயன்படுத்தப் படும் இடத்தின் நெடுவரைக்கும் (longitude), அவ்விடத்தின் நிலையான நேரத்தின் உச்ச நிலைக்கும் (standard time meridian) உள்ள வேறுபாடு ஆகியவை அடிப்படையாக உள்ளன. இதனால், சூரிய முகப்புக் காட்டி ஒரு கடிகாரம் போன்று செயல்பட முடிகிறது.
சூரிய முகப்புக் காட்டி, எவ்வித மாற்றமும் அடையாத, மிகப் பழமையான அறிவியல் கருவியாகும். இக்கருவி, அவற்றின் அமைப்பிற்கு உதவும் அடிப்படை அறிவியல் கொள்கையினால் கல்விப் பணிகளுக்கும், நேரம் காட்டும் அமைப்பிற்கும் பெரிதும் பயன் படுகிறது. —வா. அனுசுயா
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 645)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eqbr75g4/
தமிழ்“சூரிய முகப்புக் காட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/eqbr75g4/APA
Oliyon Research. (2026). சூரிய முகப்புக் காட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eqbr75g4/MLA
"சூரிய முகப்புக் காட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/eqbr75g4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment