செப்பு நெருஞ்சில்
ceppu neruñcil
இதன் தாவரவியல் பெயர் இண்டிகோஃபெரா ரின்னேய் (Indigofera rinnaei) என்பதாகும்.
இதன் தாவரவியல் பெயர் இண்டிகோஃபெரா ரின்னேய் (Indigofera rinnaei) என்பதாகும். இதன் மறு பெயர்கள் இண்டிகோஃபெர்ரா இன்னேயாபில்லா (Indigofera enneaphylla), ஹெடிசாரம் புரோஸ்ட்ரேட்டம் (Hedysarum prostratum). தமிழில் நிலப் பிரண்டை என்று இதைக் குறிப்பிடுவர். இது லெகுமினேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இச்செடியைக் கடற்கரையோரம், சம வெளி, மலைப் பகுதிகளில் 750–900 மீ. உயரம் வரை காணலாம். சாகுபடி செய்யாத நிலங்களிலும், பயிரிடும் நிலத்திலும் களைச் செடியான இதைக் கூட்டமாகக் காணலாம். பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, பர்மா, இந்தோசீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் காணப்படும். இது விதை மூலம் இனப் பெருக்கமடைகிறது. விதைகள் தோன்றும் முன்னர்ச் செடியை வேருடன் பிடுங்கிப் பசுந் தாளுரமாகப் பயன்படுத்தலாம்.
செடி. செப்பு நெருஞ்சில் தரையில் படர்ந்திருக்கும் சிறிய செடி. கிளைகள் உருண்டையாகவோ, கோணமாகவோ, வெள்ளையான மயிர்களால் போர்த்தப்பட்டிருக்கும். இலைகள், ஒற்றைச் சிறகுக் கூட்டிலையமைப்பைக் கொண்டு, 3.5 செ. மீ. அளவிலிருக்கும். சிற்றிலைகள் காகிதம் போன்றவை. அடிப் பகுதியில், மென்மயிர் கொண்டவை. சிற்றிலைக் காம்பின் அடிப் பகுதி, ஆப்பு வடிவில் இருக்கும். ஓரம் முழுமையானது; முனை மழுங்கியது. இலையடிச் சிதல்கள் வளைந்தும், நீண்டும் கூரியதாயிருக்கும். இலைக் காம்பு மிகச் சிறியது. பூக்கள் சிறியவை, காம்பில்லாதவை, 2.5 மி.மீ. குறுக்களவுள்ளவை. அடர்சிவப்பு அல்லது குங்கும நிறத்தில் 10–20 பூக்களாக அடர்த்தியான ரெசீமில் இலைக் கக்கங்களில் தலை மஞ்சரி போல் இருக்கும். புல்லி வட்டத்தின் பற்கள் நீளமாக இருக்கும். அவரையில் உள்ளது போன்று கொடி, சிறகு, படகு அல்லி இதழ்கள் உண்டு.
மகரந்தத் தாள்கள் பத்து, இரு கற்றைகளாக உள்ளன. மகரந்தப் பைகள் ஒரே சீரானவை, கூர்மையானவை. சூல் பை காம்பற்றோ, சிறிதளவு காம்புடேனா இருக்கும். 1–2 அல்லது பல சூல்களைக் கொண்டிருக்கும். இதன் நுனி கூரியதாயும், வளைந்தும், 4 மி.மீ. அளவில் வெள்ளையான சிறு மயிர்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு காயிலும், இரண்டு கோண அல்லது கோள வடிவில் பளபளப்பான மஞ்சள் கலந்த பழுப்பு நிற விதைகள் இருக்கும். இது செப்டம்பர்–பிப்ரவரி மாதங்களில் பூக்கிறது.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> பயன்கள். இதன் கொடி, வேர், காய் முதலியவை மருந்தாகின்றன. இது சிறுநீரைப் பெருக்கும் தன்மை கொண்டது. இதனால், முப்பிணி, உடல் வெப்பம், காய்ச்சல், வெள்ளை நோய்கள் போகும். இச்செடிச் சாறு உடலுக்கு உரந் தரும், இது நீண்ட நாள் தீராத பால் நோய்களைத் தீர்க்க உதவுகிறது. பைத்தியத்தைத் தெளிவிக்கும்,
குத்துக்காரன் சம்மட்டி என்பதன் தாவரப் பெயர் இண்டிகோஃபெரா டிரிஸ்டா (Indigofera trista) ஆகும். இதன் வேரினால் வாத நோய், திமிர் வாதம் போன்றவை போகும். —கோ.அர்ச்சுணன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 755)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/epdxc8rj/
தமிழ்“செப்பு நெருஞ்சில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/epdxc8rj/APA
Oliyon Research. (2026). செப்பு நெருஞ்சில். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/epdxc8rj/MLA
"செப்பு நெருஞ்சில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/epdxc8rj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment