மேலிருந்து கீழ் மேம்பாடு

mēliruntu kīḻ mēmpāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி நிரல் தொடர் மேம்பாட்டுக்கான வடி வமைப்புக் கட்டுமான பிரிவு, மேம்பாட்டு செயலாக்கத்தின் போது உயர் நிலைப் பணிகள் யாவும் குறியீடு அமைக்கப்பட்டு வெளியமைப்பு வடிவத் தில் முன்னதாகவே சோதிக்கப்படும். கீழ்நிலை தரவுகள் சேர்க்கப்பட்டு வரையறைகள் மற்றும் இடைமுகங்கள் மூலம் போகப்போக சோதிக்கப் படும். வேலைக் கட்டுப்பாட்டு மொழிகள் மற்றும் செயலாக்க முறைகள் போன்ற மேல்நிலைகளில் துவங்கி இதன் மொத்த அமைப்பு உருவாக்கப் படுகிறது. படிப்படியாக இது முன்னேறி நிரல் தொடர் கட்டுப்பாட்டுக் கூறுகள் வரை விரிந்து சென்று கீழ்நோக்கிய வரிசைமுறை அமைப்பில் நிரல் தொடர் கூறுகளின் மேலும் துல்லியமான நிலைகளுக்குக் கீழிறங்கி வருகிறது. இந்த அணுகுமுறை இரண்டுவகை விளைவுகளை ஏற்படுத்தும். முதலாவது, மேம்பாட்டினை ஒட்டி அதேவேளையில் கணினி அமைப்பு ஒருங்கிணைவது ஏற்படும். அடுத்ததாக, மேம்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும்போதே கூடுதல் திறனுடைய இயக்க அமைப்பு பயன்பட்டு வருகிறது. — top down development
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1463)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/emdwhe7r/

தமிழ்
“மேலிருந்து கீழ் மேம்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/emdwhe7r/
APA
Oliyon Research. (2026). மேலிருந்து கீழ் மேம்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/emdwhe7r/
MLA
"மேலிருந்து கீழ் மேம்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/emdwhe7r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment