அரதத்தாச்சாரியார்
aratattāccāriyār
சோழநாட்டில் கஞ்சனூரில் வைணவ குலத்தில் வாசுதேவாச்சாரியாரின் புதல்வராகத் தோன்றினார்.
சோழநாட்டில் கஞ்சனூரில் வைணவ குலத்தில் வாசுதேவாச்சாரியாரின் புதல்வராகத் தோன்றினார். இவருடைய இயற்பெயர் சுதர்சனர். சிறுவயதிலிருந்தே பரமசிவனிடம் பக்திபூண்டொழுகி வந்தார். ஆகவே இவர் தந்தை இவரைப் புறக்கணித்தார். சுதர்சனர் அவ்வூரிலுள்ள அக்னீசுவரப் பெருமானை வழிபட்டு வந்தார். ஈசுவரர் தட்சிணாமூர்த்தித் திருக்கோலத்தில் எழுந்தருளி, அவருக்குச் சிவதீட்சை செய்து அரதத்தர் என்ற பெயரையும் சூட்டினார். ஒரு நாள் தம் தந்தையும் பிற வைணவர்களும் சூழ்ந்திருக்க, அவ்வூர் வரதராசர் சந்நிதியில் அக்கினிக் குழியின் நடுவில் பழுக்கக் காய்ந்த ஓர் இரும்பு முக்காலியின் மீதமர்ந்து, வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்களைக் காட்டிச் சிவபெருமானே மேலான தெய்வம் என்பதை நிலைநாட்டினார். அப்போது ஆக்கப்பட்ட நூல் 151 பாக்கள் கொண்ட சுருதி சூக்தி மாலை என்பதாகும்.
‘பஞ்சரத்தின சுலோகம்’ என்ற மற்றொரு நூலில், ‘நாராயணன் ஆயிரம் மலர்களால் சிவனைப் பூசித்தது, ஆலகாலவிடத்தை உண்டு திருமால், பிரமன் முதலானோரைக் காத்தது’ முதலான இருபத்து நான்கு காரணங்களைச் சொல்லிச் சிவனே முதற் பொருள் என நிலைநாட்டியுள்ளார்.
இவருக்குக் கமலவல்லி என்ற மனைவியும் எட்டுப் புதல்வர்களும் இரு பெண்களும் இருந்தனர். இவர் தொண்ணூற்றாறு வயதிற்குமேல் வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார்.பி.தி.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 748)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/em4vnfz5/
தமிழ்“அரதத்தாச்சாரியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/em4vnfz5/APA
Oliyon Research. (2026). அரதத்தாச்சாரியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/em4vnfz5/MLA
"அரதத்தாச்சாரியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/em4vnfz5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment