கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; முன்சி அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் எனவும் அழைக்கப்படுவார். வீரமாமுனிவர் அர்ச்சு அடைக்கல நாயகி மேல் பாடிய ‘அடைக்கல மாலை’ ‘வெண்கலிப்பா’ ஆகிய நூல்களுக்கு இவர் பொழிப்புரைகள் எழுதியுள்ளார். மேலும், அந்தோணிக்குட்டி அண்ணாவியார் எழுதிய ‘பேரின்பக் காதல்’ என்னும் பகுதிக்கும் பொழிப்புரை வரைந்துள்ளார்.