பட்டினி இறப்பு
paṭṭiṉi iṟappu
பஞ்சம், நிலச் சரிவு, சுரங்கம் ஆகியவற்றில் சிக்கிக் கொள்ளல், பெற்றோர் தம் கவனக் குறைவு, வேண்டுமென்றே உணவை ஒதுக்குதல்,உண்ண மறுத்தல் முதலான பல காரணங்களால், பட்டினி இறப்பு (starvation death) ஏற்படலாம்.
பஞ்சம், நிலச் சரிவு, சுரங்கம் ஆகியவற்றில் சிக்கிக் கொள்ளல், பெற்றோர் தம் கவனக் குறைவு, வேண்டுமென்றே உணவை ஒதுக்குதல்,உண்ண மறுத்தல் முதலான பல காரணங்களால், பட்டினி இறப்பு (starvation death) ஏற்படலாம்.
அறிகுறி. உடல் நலக் குறைவு, பசியும், வலியும் தோன்றுதல், தோல் அடிக் கொழுப்புக் குறைதல், கண்கள் குழி விழுதல், பாவை விரிவடைதல், கன்னங்கள் ஒட்டிப் போதல், எலும்புகளின் துருத்தல், உலர்ந்த உதடு, தோல், நாக்கின் மீது அழுக்குப் படிதல், தாங்க முடியாத தாகம், உமிழ் நீர் கட்டியாகக் குறைந்து காணப் படுதல், குரல் கம்முதல், தோல் உலர்ந்து, மெலிந்து, நெகிழ்வுத் தன்மை இழந்து, சுருக்கம் விழுந்து, நிறமி தோன்றுதல், நாடித் துடிப்பு குறைந்தும், மெதுவாகவும் இருத்தல், உடல் வெப்பம் மிகவும் குறைதல், சிறுநீர் வெளிப்படுவது குறைதல், சிறுநீரில் அமிலம் காணப் படுகின்றன. 40%க்கும் மேலாக உடல் எடையிழப்பு ஏற்பட்டால், மரணம் ஏற்படும். மரணத்திற்கு முன்பு, உள வய மாற்றங்கள் ஏற்படலாம்.
நாட்பட்ட நோயாளிகளில் சோர்வு. மிகையாகச் சிறுநீர் பிரிதல், சோகை, உடல் வெப்பம் குறைதல்,குருதி அழுத்தக் குறைவு ஆகியவை தோன்றும், சுய நினைவிழப்பு, கால்–கை மற்றும் முகத்தில் வீக்கம், பேதி, சீத பேதி, காச நோய், ஆகியவையும் தோன்றுகின்றன. குருதியில் சர்க்கரை, குளோரைடு, கொலாஸ்ட்ரால் ஆகியவற்றின் அளவு குறைகிறது. இதயத் தளர்வாலும், இதயத்தில் கபில நிறச் சூம்பலாலும் நோய்த் தொற்றாலும் மரணம் உண்டாகிறது. நீரும், உணவும், முழுமையாகத் தவிர்க்கப் பட்டால், 10–12 நாள்களில் மரணம் விளையும். உணவு மட்டும் நிறுத்தப் பட்டால், 6–8 வாரங்களில் மரணம் நேரிடும். வயது, பாலினம், உடல் நிலை, உடல் வெப்பம் போன்ற கூறுகள் மரணத்தை அறுதியிடுகின்றன.
குற்றஞ் சார்ந்த மருந்தியல் படி, உணவே அருந்தாது தற்கொலை செய்து கொள்ளலாம். அரசியல் காரணங்கள் குறித்து, உணவு அருந்தாமல் இறக்க நேரிடுகிறது. தற்செயல் பட்டினிச் சாவுகளுக்குப் பஞ்சமும், பயணம் செய்யும் கப்பல் நடுக் கடலில் உடைந்து போதலும், விபத்துகளில் சிக்கி, உணவின்றித் தவிப்பதும் காரணங்களாகின்றன. —அ. கதிரேசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 444)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eh4bv2x3/
தமிழ்“பட்டினி இறப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/eh4bv2x3/APA
Oliyon Research. (2026). பட்டினி இறப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eh4bv2x3/MLA
"பட்டினி இறப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/eh4bv2x3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment