பாய்மங்கள் பாயும் குழாய்களை இணைக்கும் இடத்திலோ, பாய்மங்களை நோக்கி வைத்திருக்கும் தொட்டிகளிலிருந்து வெளிச் செல்லும் குழாய் அமைந்துள்ள இடத்திலோ இணைப்புகள் இருக்கும். இந்த இணைப்புகளில் வளையத் தக்கைகளை வைப்பதுண்டு. கசிவு, இழப்பு ஆகியவை ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, இத்தக்கைகளைக் காற்று புகா வண்ணம் வைப்பர். சிப்பங்கட்டும் இழைகளில் பயன்படுத்தப்படும் இட அடைப்பிதழ்த் தடுப்புகள், பாய்மங்களை வெளிச் செலுத்துவதற்கும் உட்புக வைப்பதற்கும் பயன்படுகின்றன. இத்தகைய அடைப்பிதழ்த் தண்டுகள் கசிவு ஏற்படா வண்ணம் தண்டைச் சுற்றிப் பொருத்தப்படும். சிப்பங்கட்டும் இழைகள் பெ பொருத்தப்படும் அமைப்பு, அளவு, வடிவம், செலுத்தப்படும் பாய்மம், இயக்கத்தில் இருக்கும் தண்டு அல்லது உருளையின் வேகம், வெப்ப நிலை, பிரித்தெடுக்கும் வழி முறை ஆகியவற்றைப் பொறுத்துச் சிப்பங்கட்டும் இழைகளுக்கான உலோகத்தையும், பிற பண்புகளையும் கருத்திற் கொள்ள வேண்டும். நுண் இழை, ரப்பர், தக்கை, கல்நார் ஆகிய பொருள்கள் பயன்படுத்தப்படும். சிப்பங்கட்டல் இழைகளைத் தேவையான வடிவத்தில் அமைத்துக் கொள்ளலாம். ஏனெனில், பயன்படுத்தக் கூடிய ஒவ்வோர் இடமும் வெவ்வேறு வடிவமைப்பில் இருக்கும். அவற்றுள் சதுரம், செவ்வகம், அறுபட்டை வடிவம், V வடிவம், U வடிவம், உருண்டை வடிவம் போன்ற அமைப்புகள் அடங்கும். —கே. ஆர். கோவிந்தன்