அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம்
ariyāṉā vēḷāṇmaip palkalaikkaḻakam
தில்லி நகருக்குத் தெற்கே 1610 கி.மீ.
தில்லி நகருக்குத் தெற்கே 1610 கி.மீ. தூரத்தில், அரியானா மாநிலத்திலுள்ள கிசார் (Hisar) என்னும் நகரில் 3300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் 1970–ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள் 2–ஆம் நாள் தோற்றுவிக்கப் பெற்றது. இது முன்னர்ப் பஞ்சாபு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாகவே இயங்கி வந்தது.
வேளாண்மை, கால்நடை மருத்துவம், அடிப்படை அறிவியல், விலங்கின அறிவியல், மனையியல், உடற்பயிற்சி ஆகிய துறைகளுக்காக மொத்தம் ஏழு கல்லூரிகள் அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளன. வேளாண்மைக்காக இரு கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் ஒவ்வொரு துறையிலும் இளமறிவியல் பட்டத்திலிருந்து ஆய்வுப்பட்டம் வரை மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.
வேளாண்மைக் கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கப் பணி ஆகியவற்றின் வாயிலாக, இப்பல்கலைக்கழகம் வேளாண்மை வளர்ச்சியில் பெரும் பணியாற்றி வருகிறது. உழவர் பெருமக்களின் வேளாண்மைச் சிக்கல்களை இப்பல்கலைக்கழக அறிவியல் வல்லுநர்கள் தீர்த்திட உதவி செய்கின்றனர். இதன் உதவியாலும் கருத்துரையாலும் கிசார் நகரைச் சுற்றியும் வேளாண்மை வளர்ச்சியடைந்து வருகிறது.
அரியானா வேளாண்மைப் பல்கலைக் கழக நிருவாகக் கட்டடத் தோற்றம்.
வேளாண்மைப் பொருளியல், வேளாண்மைத் தொழில் நுட்பவியல், பூச்சியியல், தோட்டக் கலையியல், மண்ணியல், காய்கறிப் பயிரியல் போன்ற பாடத்துறைகள் வேளாண்மைக் கல்லூரிகளில் கற்பிக்கப்படுகின்றன.
விலங்கின வளர்ச்சியியல் (Animal Breeding), விலங்கின ஊட்டச் சத்து இயல் (Animal Nutrition), கால்நடை வளர்ச்சியும் பாதுகாப்பும் போன்ற பாடத் துறைகள் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் கற்பிக்கப்படுகின்றன.
அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 1982–ஆம் ஆண்டு 1904 மாணவரும் 386 மாணவியரும் பயின்றனர்.எல்.டி.க.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 792)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ec7x4wg8/
தமிழ்“அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ec7x4wg8/APA
Oliyon Research. (2026). அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ec7x4wg8/MLA
"அரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ec7x4wg8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment