சிட்ரனெல்லா தைலம்
ciṭraṉellā tailam
சிம்போபோகன் நார்டஸ் (Cymbopogon nardus) என்ற எலுமிச்சை இனப் புல்லிலிருந்து தயாரிக்கப்படுவது சிட்ரனெல்லா தைலமாகும்.
சிம்போபோகன் நார்டஸ் (Cymbopogon nardus) என்ற எலுமிச்சை இனப் புல்லிலிருந்து தயாரிக்கப்படுவது சிட்ரனெல்லா தைலமாகும். இந்தப் புல் ஆஃபிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியாவின் மிகு வெப்ப மண்டலப் பகுதிகளில் வளர்கிறது. இலங்கை, ஜாவா போன்ற நாடுகளில் இது பெருமளவில் பயிர் செய்யப்படுகிறது. நீராவியின் மூலம் காய்ச்சி வடித்தல் எனும் முறையால் சிட்ரனெல்லா தைலம் சிம்போபோகன் நார்டஸ் புல்லிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. நீள் உருளை வடிவமுள்ள ஒரு கலனில் சிம்போபோகன் நார்டஸ் புல் அடைக்கப்பட்ட பின், கலனை மூடிப் புல்லின் வழியே நீராலி செலுத்தப்படும். நீராவியிலேயே சிட்ரனெல்லா தைலம் படிந்து, பின்னர், குளிரும் போது, நீரிலிருந்து தனியே பிரிந்து விடுகிறது. லானா பாட்டு என்றும் குறிக்கப்படும் சிட்ரனெல்லா தைலம் இளமஞ்சள் நிறமுடையது. எளிதில் ஆவியாகும் தன்மையுள்ள இத்தைலம் காரமான எலுமிச்சை மணத்தைக் கொண்டது; ஆல்கஹாலில் கரையும் தன்மையுடையது.
சிட்ரனெல்லா தைலம் டெர்ப்பீன்கள் எனப்படும் கரிமப் பொருள்களின் வகுப்பைச் சேர்ந்ததாகும். ஸ்ரீலங்காவில் தயாரிக்கப்படும் சிட்ரனெல்லா தைலத்தில், சிட்ரனெல்லால் (I) என்ற ஆல்டிஹைடு தொகுதி அடங்கிய வளைய வடிவமற்ற ஒற்றை டெர்ப்பீன் 10% அடங்கியுள்ளது. 15°C இல் இத்தைலத்தின் அடர்த்தி எண் 0.897—0.912; 20°C வெப்ப நிலையில் இதன் ஒளி விலகல் எண் 1.479—1.485; ஒளிச்சுழற்சி -6° -(-14°) ஆகும். ஜாவாவில் தயாரிக்கப்படும் சிட்ரனெல்லால் தைலத்தில் 30—40% வரை சிட்ரனெல்லால் உள்ளது. இத்துடன் ஜெரானியோல், மெத்தில் யூஜினோல் ஆகிய சேர்மங்களும் அடங்கியுள்ளன. 15°C இல் இத்தைலத்தின் அடர்த்தி எண் 0.885—0.900. 20°C இல் இதன் ஒளி விலகல் எண்1.468—1.473; ஒளிச்சுழற்சி - 2°-(5°) ஆகும்.
சிட்ரனெல்லா தைலம் பூச்சிகளை விரட்டும் பொருளாகப் பயன்படுகிறது. மேலும், நறுமணம் அடங்கிய பூச்சி கொல்லிகள், சோப்புடன் சேர்க்கப்படும் மணப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் ஆகியவற்றின் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது. சிட்ரனெல்லால், சிட்ரனெல்லோல் (citronellol), ஜெரானியோல் ஆகிய சேர்மங்களைத் தொழில் முறையில் தயாரிக்கும் போது, இது மூலப் பொருளாகப் பயன்படுகிறது. சிட்ரனெல்லால் தைலத்திலுள்ள சிட்ரனெல்லால், அமிலத்துடன் வினை புரிந்து, ஐசோயியூலிகோல் என்ற டெர்ப்பீன் ஆல்கஹாலாக மாறுகிறது. இதனுடன் ஹைட்ரஜனைச் சேர்த்துச் செயற்கை முறையில் மெந்தால் எனப்படும் டெர்ப்பீனைத் தயாரிக்கலாம். மெந்தால், நறுமணப் பொருள்கள், மருந்துகள் தயாரிப்பில் பயன்படுகிறது. —எல்.ஆல், இலக்குமணசர்மா
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 210)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e6hdh5m8/
தமிழ்“சிட்ரனெல்லா தைலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/e6hdh5m8/APA
Oliyon Research. (2026). சிட்ரனெல்லா தைலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e6hdh5m8/MLA
"சிட்ரனெல்லா தைலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/e6hdh5m8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment