அரிவாள்தாய நாயனார்
arivāḷtāya nāyaṉār
அரிவாள்தாய நாயனார் பெரிய புராணங் கூறும் அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர்.
அரிவாள்தாய நாயனார் பெரிய புராணங் கூறும் அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர். சோழ நாட்டில் கணமங்கலத்திலிருந்த வேளாளர். வறுமையால் மெலிந்த நிலைமையில் கால் இடறவே, தாம் சிவனுக்குக் கொண்டுவந்த செந்நெலமுதும் செங்கீரையும் மாவடுவும் கமரில் சிந்தியது கண்டு, கையிலிருந்த அரிவாளால் தம் கழுத்தை அரியப்புகுகையில் இறைவனது கை அந்தக் கமரினின்று எழுந்து அவரது கையைப்பற்றித் தடுத்தது. அதே சமயத்தில் கமரில் விடேல் விடேல் என்று மாவடுவைக் கடிக்கும் ஒலியும் கேட்டது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 236)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e27ktdp3/
தமிழ்“அரிவாள்தாய நாயனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e27ktdp3/APA
Oliyon Research. (2026). அரிவாள்தாய நாயனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e27ktdp3/MLA
"அரிவாள்தாய நாயனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e27ktdp3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment