அர்பன்
arpaṉ
ரோமன் கத்தோலிக்கப் போப் ஆண்டவர்களில் எட்டுப் பேருக்கு இப்பெயருண்டு.
ரோமன் கத்தோலிக்கப் போப் ஆண்டவர்களில் எட்டுப் பேருக்கு இப்பெயருண்டு. அவர்களில் தலையானவர்கள் மூவருக்குத் தனிக் கட்டுரைகள் தரப்பட்டுள்ளன.
அர்பன் II
பிரெஞ்சுக்காரர்; 1088 முதல் 1099 வரை போப்பாக இருந்தவர். சிலுவைப் போர்களை இவர் ஆதரித்தார்; ஆயினும் கிறிஸ்தவர்கள் எருசலேமைக் கைப்பற்றுவதைக் காணுமுன் இறந்து போனார்.
அர்பன் VI
1379 முதல் 1389 வரை போப்பாக இருந்தார். இவர் காலத்தில் போப்பின் இருப்பிடம் அலிக்னானிலிருந்து ரோமிற்கு மாற்றப்பட்டதை எதிர்த்துப் பிரெஞ்சு பிஷப்புக்கள் VII-ம் கிளெமன்ட் என்பவரை அலிக்னானில் போப்பாக நியமித்துக் கொண்டார்கள். இப்பிளவு சுமார் 50 ஆண்டுகளுக்குத் தொடர்ந்திருந்தது. VII-ம் கிளமென்டை அர்பன் சமயவரம்பினின்று நீக்கினார். 1381-ல் சார்லஸ் என்னும் துராசோ மன்னனால் சிறையிடப்பட்ட VI-ம் அர்பன் ஜெனோவாவிற்குத் தப்பியோடினார். 1389-ல் ஒரு கோவேறு கழுதை மீதிருந்து கீழே விழுந்ததால் உண்டான காயங்களால் இறந்தார்.
அர்பன் VIII (1568-1644) 1623 முதல் 1644 வரை போப்பாக இருந்தார்; உற்றார் உறவினர்களுக்கு அதிகச் சலுகை காட்டியதாக இவர்மேல் புகார் ஏற்பட்டது. பிரெஞ்சு கார்டினலும், அரசியல் நிபுணருமான ரிஷலூ இவர் கொள்கைகளை எதிர்த்தார். முப்பது ஆண்டுப்போரில் இவர் பிரான்சை யாதரித்தார்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 183)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dzqdc49k/
தமிழ்“அர்பன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dzqdc49k/APA
Oliyon Research. (2026). அர்பன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dzqdc49k/MLA
"அர்பன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dzqdc49k/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment