இராமகிருட்டிணானந்தர்
irāmakiruṭṭiṇāṉantar
தவத்திரு இராமகிருட்டிண பரமஅம்சரின் அணுக்கச் சீடர்களுள் ஒருவர்.
தவத்திரு இராமகிருட்டிண பரமஅம்சரின் அணுக்கச் சீடர்களுள் ஒருவர். இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் ஊக்லி (Hooghly) மாவட்டத்தில் வைதிகக் குடும்பமொன்றில் கி.பி. 1863–ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய இயற்பெயர் சரிபூசன்சக்கரவர்த்தி. இராமகிருட்டிண பரமஅம்சரின் நேரடிச் சீடரான இவர், சென்னை மயிலாப்பூரில் இராம கிருட்டிண தொண்டு நிறுவனத்தை நிலைநாட்டினார். தென்னாட்டில் இராமகிருட்டிண ஆசிரமங்களை நிலைநாட்டியவரும் இவரேயாவார். துறவியாக வாழ்நாள் முழுவதையும் மக்கள்தொண்டில் கழித்த சுவாமி இராமகிருட்டிணானந்தர் 1911–ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதம் 21–ஆம் நாள் சித்தி அடைந்தார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 100)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dzpaytj7/
தமிழ்“இராமகிருட்டிணானந்தர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dzpaytj7/APA
Oliyon Research. (2026). இராமகிருட்டிணானந்தர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dzpaytj7/MLA
"இராமகிருட்டிணானந்தர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dzpaytj7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment