தஞ்சைச் சோழ அரசர்களுள் ஒருவன். இவன் கி.பி. 11–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவன். வேங்கிச் சாளுக்கிய அரசர் விக்கிரமாதித்தியர், அதிராசேந்திரனைச் சோழ அரசனாகக் கங்கைகொண்ட சோழபுரத்தில் முடிசூட்டுவித்தார். மக்கள் கிளர்ந்தெழுந்த கலகமொன்றில் இவன் உயிர் துறந்தான். இவன் சைவ சமயத்தினன்; குறுகிய காலமே ஆட்சி செய்தவன்.