இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்
ilakkaṇam muttukkumāracāmit tampirāṉ
சீர்காழித் தேவத்தானத்தில் கட்டளை விசாரணையாக இருந்து பணியாற்றியவர்.
சீர்காழித் தேவத்தானத்தில் கட்டளை விசாரணையாக இருந்து பணியாற்றியவர். சீர்காழித் தல வரலாறு என்னும் பெயருடன் 1942–இல் வெளிவந்த நூல் இவரது முகவுரையோடு அமைந்தது. சிவஞானபோத மாபாடியம் இவரது குறிப்புரையுடன் 1921–இல் அச்சேறியது. அக்குறிப்புரையின் சிறப்பை நோக்கும்போது, இவர் சித்தாந்த நூல்களில் புலமை மிகவுடையவர் என்பது தெரிகிறது. தருமபுரத்தில் மெய்கண்டார் சித்தாந்த மாநாடும் திருமுறைத் திருநாளும் 1941 ஆவணித் திங்களில் நடைபெற்றது. அந்நாள் கருத்தரங்கச் செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து நூலாக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தருமைக் கல்லூரி 1948–ஆம் ஆண்டில் தோன்றியபோது அக்கல்லூரியில் இவர் ஆசிரியராகப் பொறுப்பேற்கவில்லை என்றாலும் தண்டியலங்காரம், நன்னூல், யாப்பு முதலிய இலக்கணப் பாடங்களைச் சிறப்பு வகுப்பு என்ற முறையில் மாணவருக்குக் கற்பித்து வந்தார். எனவேதான் இவரை இலக்கண சுவாமிகள் என்றழைப்பது வழக்கமாயிற்று. கல்லூரியில் இங்ஙனம் மூன்றாண்டுகள் சிறப்பு வகுப்பு நடத்திய தம்பிரான், இறுதியில் ஆதீனத்தின் ஆதரவில் இருந்தார் என்பதைவிட அறிஞர் பலரின் ஆதரவில் வாழ்ந்து வந்தார் என்பது பொருத்தமாகும். அந்த அளவிற்கு அறிஞர் பலருடைய நட்பு இவருக்கு இருந்தது. இவர்தம் இலக்கணப் புலமையும் இனிய நட்பும் பதிப்பாசிரியர்ப் பணியில் மேற்கொண்ட தமிழ்ப் பற்றும் பாராட்டிற்குரியவை. தே.ஆ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 281)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dtj82br7/
தமிழ்“இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dtj82br7/APA
Oliyon Research. (2026). இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dtj82br7/MLA
"இலக்கணம் முத்துக்குமாரசாமித் தம்பிரான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dtj82br7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment