செவியட் கம்பளி ஆடை
ceviyaṭ kampaḷi āṭai
ஆட்டுக் கம்பளத்தால் தயாரிக்கப் படும் துணி செவியட் கம்பளி ஆடை (cheviot cloth) எனப் படும்.
ஆட்டுக் கம்பளத்தால் தயாரிக்கப் படும் துணி செவியட் கம்பளி ஆடை (cheviot cloth) எனப் படும். இங்கிலாந்துக்கும், ஸ்காட்லாந்துக்கும் இடையேயான மலைத் தொடரில் வளர்க்கப் படும் செவியட் எனும் ஆட்டு இனம் ஒரு குட்டை வகைச் சிறப்பு கம்பளி இழைக்குப் பெயர் பெற்றது. இந்த ஆட்டில் தோலின் மீது அடர்த்தியாக வளரும் இக்கம்பளியைக் கொண்டு, உறுதிக் கட்டுத் துணியைத் (tweed) தயாரிக்கலாம். இத்துணியைத் தயாரிப்பதற்குப் பொதுவாகப் பயன் படும் கம்பளி நூல்களை விடச் செவியட் கம்பளி நூலை நுண்மை மிக்கதாகத் தேர்வு செய்து நெய்தால், உயர் வகை உறுதிக் கட்டுத் துணி கிடைக்கும். ஒரே வண்ணம் அல்லது மாறி, மாறி எதிர் பலிப்புக் கோலங்கள் (mirror obliqueness or herringbone) கொண்ட அமைப்பைச் செவியட் கம்பளித் துணியில் உருவாக்குதல் வழக்கம்.
செவியட் துணி சாதாரண செவியட் கம்பளி நூலிலிருந்தும், உயர் வகை நன்கு முறுக்கப்பட்ட மணிக் கம்பளி நூலிலிருந்தும் (worsted yarns) தயாரிக்கப் படுகிறது. மணிக் கம்பள செவியட் ஆழ்ந்த நிறங்களில் வலம்புரி இரு படை நெசவால் (right-hand twill) தயாரிக்கப் படுகிறது. —மே.ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. B.P. Corbman, Textiles–Fibre to Fabric, Sixth Edition, McGraw–Hill Book Company, Singapore, 1985.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 909)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dpbsjnt4/
தமிழ்“செவியட் கம்பளி ஆடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dpbsjnt4/APA
Oliyon Research. (2026). செவியட் கம்பளி ஆடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dpbsjnt4/MLA
"செவியட் கம்பளி ஆடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dpbsjnt4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment