போர், அறிவு, அறிவியல், கலைகள் ஆகியவற்றிற்குரிய கிரேக்கப் பெண்தெய்வம். சீயசு என்னும் (Zeus) முதன்மைக் கடவுள் அல்லது கடவுள்களின் அரசன், இவள் நெற்றியிலிருந்து தோன்றியவன் என்று கிரேக்கப் புராணக்கதை கூறுகிறது. இவள் போருக்குச் செல்வதுபோல் கவசங்கள் அணிந்து படைக் கருவிகளைக் கொண்டிருப்பவள். கிரேக்கர்கள் கலைக்கும் கைத் தொழிலுக்கும் கடவுளாக இவளை வணங்கினர். அதினா (Athena) கன்னித் தெய்வமாவாள். இவளது கோயில் ஒன்று ஆதென்சிலுள்ள அக்கராபாலிசில் உள்ளது. இக்கோயில் பார்த்தினான் (Parthenon) கோயில் எனக் கூறப்படுகிறது. இவள் மரங்களில் தலைசிறந்த மரமாகிய ஒலிவ மரத்தை (Olive Tree) உண்டாக்கியதால் சிறந்த தெய்வமாகக் கருதப்படுகிறாள். இதனால் ஆதென்சு என்னும் கிரேக்க நகர அரசின் (City State) தலைநகரத்திற்கு இவளுடைய பெயர் சூட்டப்பட்டது. உரோமானிய தேவதை மினர்வா, அதினாவின் உருவத்தையும் பண்புகளையும் கொண்டுள்ளவளாகக் கருதப்படுகிறாள். தொன்மைக்காலச் சிற்பிகள் அதினாவின் சிற்பங்களை அதினா சிலை வடிக்கும்பொழுது கவசத்துடன் கையில் மந்திரக் கேடயம் ஒன்றையும் பெற்றிருப்பதுபோல் வடித்துள்ளார்கள்.