சூரிய நிற மாலை
cūriya niṟa mālai
சூரியனிடமிருந்து பெறப்படும் கதிர்வீச்சு முழுக் கரும் பொருளின் கதிர் வீச்சை ஒத்துள்ளது.
சூரியனிடமிருந்து பெறப்படும் கதிர்வீச்சு முழுக் கரும் பொருளின் கதிர் வீச்சை ஒத்துள்ளது. சூரிய நிற மாலையில் (solar spectrum), சூரியனின் மேற்பரப்பு வெப்ப நிலை 5750 Kக்கான பெரும ஆற்றலின் அலை நீளம் 5000 A ஆகும். சூரிய நிற மாலை மிகு எண்ணிக்கையான கருங் கோடுகளைக் கொண்டுள்ளது. இவை ஃபிரனோஃபர் வரிகள் (Fraunhofer lines) எனப்படும். இந்தக் கோடுகள் 1802இல் வோல்லாஸ்டன் என்பாரால் முதலில் கண்டு பிடிக்கப்பட்டன. பின்னர், 1814இல் ஃபிரனோஃபர் தெளிவான கருத்தை அளித்தார். இக்கோடுகள் முழு வரிசை நிற மாலையிலும் பெறப்பட்டன (அதாவது புற ஊதா, அகச் சிவப்பு), பல வரிகளின் அலை நீளத்தை நுணுக்கமாக ஃபிரனோஃபர் கணக்கிட்டார். மேலும், ஒரு சில வளிமங்களும், ஆவிகளும் வெளியிடப்படுவதால், உருவாகும் ஒளிர் வரிகளையும் (bright lines) கண்டறிந்தார்.
கிர்சாஃப்பின் கதிர் வீச்சு விதியின் படி, குறை வெப்ப நிலையில் உள்ள எந்தவொரு பொருளும், எல்லா அலை நீளங்களையும் கொண்ட கதிர் வீச்சை உட்கவரும். அவை மின்னிறக்கம் (electric discharge) பெறும் போது, கதிர் வீச்சை வெளியிடுகின்றன. சூரிய நிற மாலை ஓர் உட்கவர் நிற மாலை (absorption spectrum) ஆகும். புவி வளி மண்டலத்திலுள்ள குளிர் வளிமங்களையும், ஆவிகளையும், சூரியனின் வெளி வளி மண்டலத்தையும் பொறுத்து ஃபிரனோஃபர் வரிகள், உட்கவர் வரிகள் (absorption lines) எனப்படுகின்றன. மிகு வெப்ப நிலையிலுள்ள சூரியனின் மையப் பகுதி ஒளி மண்டலம் (photosphere) எனப் படும். ஒளி மண்டலத்தைச் சூழ்ந்துள்ள பகுதிக்கு, நிற மண்டலம் (chromosphere) என்று பெயர். இது ஒளி மண்டலத்தை விடக் குறைந்த வெப்ப நிலை உடையது. ஃபிரனோஃபர் வரிகளின் அமைப்பைக் கொண்டு, சூரியனின் வளி மண்டலத்திலுள்ள வளிமங்களின் தன்மையை அறியலாம். இந்த வழி முறையில் சூரியனின் வளி மண்டலத்தில், அறுபதுக்கு மேற்பட்ட வளிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆய்வகத்தில் ஹீலியத்தைத் தனித்துப் பிரிப்பதற்கு முன்பே, சூரிய நிற மாலையின் ஃபிரனோஃபர் வரிகளின் ஆய்விலிருந்து, முதன் முதலாக ஹீலியம் வளிமம் இருப்பது கண்டறியப்பட்டது. ஃபிரனோஃபர் வரிகள் அகர வரிசையில் குறிக்கப்பட்டுள்ளன. சில வரிகளின் அலை நீளங்களும், அவற்றிற்குக் காரணமான தனிமங்களும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
அட்டவணை
—பெ. துரைசாமி நூலோதி. Brijlal and N. Subrahmanyan. Heat and Thermodynamics, Eighth Edition, S. Chand and Co., New Delhi, 1982.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 635)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dker7zad/
தமிழ்“சூரிய நிற மாலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dker7zad/APA
Oliyon Research. (2026). சூரிய நிற மாலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dker7zad/MLA
"சூரிய நிற மாலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dker7zad/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment