பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் வாழ்ந்த ஓவியக் கலைஞர்களுள் ஒருவர் ஆவார். இவர் சுவரோவியங்கள் (Frescoes) என்னும் ஓவிய முறையில் புகழ் பெற்ற பல ஓவியங்களைத் தீட்டியுள்ளார். இவருடைய ஓவியங்கள் இத்தாலியின் மறுமலர்ச்சிக் காலத்தைச் சேர்ந்தனவாகும். இராபேல் (Raphael) கி.பி. 1483–ஆம் ஆண்டு அர்பினோ (Urbino) என்னும் ஊரில் பிறந்தார். சிலர் கி.பி. 1504–ஆம் ஆண்டு பிளாரென்சு நகரத்தில் குடியேறினார். இவர் கி.பி. 1509–ஆம் ஆண்டுக்குப் பின் உரோம் நகரத்திற்குச் சென்று இரண்டாம் சூலியசு (Julius II) என்னும் போப்பாண்டவரின் விருப்பப்படி பல சித்திரங்கனைத் தீட்டினார். இவருடைய சித்திரங்களுள் மிகச் சிறந்தவை ‘ஏவாளின் பிறப்பு’ (Creation of Eve) என்பதும் மும்மை (Trinity) என்பதும் ஆகும். இவர் இரண்டாம் பெருசினோ (Perugino II) என்னும் புகழ்பெற்ற ஓவியரின் மாணவராக இருந்தார் என்று கூறப்படுகிறது. இவர் கி.பி. 1504–ஆம் ஆண்டு ‘கன்னிமேரியின் திருமணம்’ (Marriage of the Virgin) என்னும் ஓவியத்தைத் தீட்டினார். கன்னிமேரியின் பல ஓவியங்களை இவர் தீட்டியுள்ளார். இவர் இலியனார்டோவின் நுட்பங்களைத் தம் ஓவியக்கலையில் புகுத்தினார். பிளாரென்சு நகரத்தைச் சேர்ந்த செல்வர்களுக்காகக் கன்னிமேரியின் ஓவியங்களைத் தீட்டினார். இராபேல் உரோம் நகரத்திற்குச் சென்ற காலத்தில் மைக்கேல் ஆஞ்சலோ என்னும் புகழ்பெற்ற ஓவியர் சிசுடின் மாதாகோவிலின் (Sistine Chapel) மேற்பரப்பை (விதானம்) உருவாக்கிக் கொண்டிருந்தார். போப்பாண்டவரின் இருப்பிடமான வத்திகனில் ஓர் அறைக்கு இராபேல் அகக்கட்டிட அலங்காரம் அமைத்தார். இதனைத் தொடர்ந்து இராபேல் வத்திகன் மாளிகையின் பல பகுதிகளில் அழியாத புகழ் கொண்ட ஓவியங்களைத் தீட்டினார். சிசுடின் மாதாகோவிலின் திரைகளில் மாபெரும் ஓவியங்களை இவர் தீட்டியுள்ளார். இந்த ஓவியங்கள் உலகின் மாபெரும் அருங்காட்சியகங்களிலும் கலைக்கூடங்களிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. சுவரோவியங்களுடன் இவர் பல கண்கவர் சிற்ப வேலைகளையும் செய்துள்ளார். இவர் கி.பி. 1511–ஆம் ஆண்டு இரண்டாம் சூலியசு என்னும் போப்பாண்டவரின் ஓவியத்தைத் தீட்டினார். இவருடைய ஓவியங்களுள் மிகுந்த புகழ் பெற்றது போரகாவில் தீ (Fire in the Borogo) என்பதாகும். இராபேல் (Raphael)