மின் சுற்றுகளின் பல்வேறு பகுதிகளின் தொடர்புகள் பற்றிய ஆய்வே நேர் மின் சுற்றுக் கோட்பாடு எனலாம். வகைபாடு நேர் மின் சுற்றுகள் தொடர் நிலை இணைப்பு, பக்கவாட்டு இணைப்பு என்று அடிப்படையாக இரு வகைப் படும். இவற்றின் மேம்பாடுகளே ஏனைய சிக்கலான சுற்றுகளாகும். தொடர் நிலைச் சுற்று. ஓர் எளிய தொடர் நிலை மின் சுற்று படம் (1) இல் காட்டப் பட்டுள்ளது. அதில் E வோல்ட் கொண்ட மின் கல அடுக்கும், R₁, R₂, R₃ மதிப்புகள் கொண்ட மூன்று தடையங்களும் உள்ளன. மின்னோட்டம் அடுக்கின் நேர் முனையத்திலிருந்து வெளிப் புறத் தடையங்கள் மூலம் அடுக்கின் எதிர் முனையத்திற்குப் பாய்கிறது. தடையங்களில் ஒன்றின் பின் ஒன்றாகத் தொடர் நிலையில் மின்னோட்டம் பாய்வதால், இது தொடர் நிலைச் சுற்றாகும். பக்கவாட்டுச் சுற்று. மூன்று தடையங்கள் R₁, R₂, R₃ ஆகியன பக்கவாட்டில் இணைக்கப் பட்டுள்ளன. அவற்றின் இறுதி முனையங்களில் ஒன்று மின் கல அடுக்கின் நேர் முனையத்தோடும், மற்றொன்று எதிர் முனையத்தோடும் இணைக்கப் படும். மின்கல அடுக்கிலிருந்து செல்லும் மின்னோட்டம் மூன்றாகப் பிரிந்து, ஒவ்வொரு தடையின் வழியாகவும் சென்று பின்னர், ஒன்று சேர்ந்து மின் கல அடுக்கின் எதிர் முனையத்தில் பாயும். சுற்று ஆய்வின் இயற்பியல் விதிகள் நேர் மின் சுற்றுகளின் இயக்கம் இயற்பியலின் குறிப்பிட்ட அடிப்படை விதிகளான ஓம் மற்றும் கிரிச்சாஃப் விதிகளை ஒட்டி அமையும். மின்னழுத்த வீழ்ச்சி. ஒரு தடையத்தின் மூலம் மின்னோடட்ம் பாயும் போது, அதன் குறுக்கே ஒரு மின்னழுத்த வீழ்ச்சி ஏற்படுகிறது. மின்னோட்டம் நுழையும் முனையில் அதன் முனை நேர் குறியுடையது. மின்னழுத்த வீழ்ச்சி மின்னோட்டம் (ஆம்பியர்), தடை (ஓம்) ஆகியவற்றின் பெருக்குத் தொகைக்குச் சமம். இதுவே ஓம் விதியாகும். V= IR படம் (1) இல் R₁ இல் வீழ்ச்சி V₁ ஆகும். மின்னழுத்தங்களின் கூட்டுத் தொகை. மின் மூலங்கள் தரும் மின்னழுத்த உயர்ச்சி மற்றும் பிற பகுதிகளில் வரும் மின்னழுத்த வீழ்ச்சி ஆகியவற்றின் கூட்டுத் தொகை ஒரு மின் சுற்றில் சுழி ஆகும். இது கிரிச்சாஃப் முதல் மின் விதி ஆகும். படம் (1) இல் உள்ள சுற்றில் \begin {align} E - V_1 - V_2 - V_3 = 0 \\ E = V_1 + V_2 + V_3 \end {align} மின்னோட்டம் மற்றும் தடைய மதிப்புகளில் குறிப்பிட்டால், E = I (R_1 + R_2 + R_3) = IR (மொத்தம்) தொடர் நிலைச் சுற்றில் தடைய மதிப்புகளைக் கூட்டிக் கொள்ளலாம். Rமொத்தம்= (R_1 + R_2 + R_3) மின்னோட்டங்களின் கூட்டுத் தொகை. ஒரு மின் சுற்றுச் சந்திப்பின் உட்செல்லும். வெளி வரும் மின்னோட்டங்களின் கூட்டுத் தொகை சுழி ஆகும். இதுவே கிரிச்சாஃப் இரண்டாம் விதி ஆகும். படம் 2இல் சந்திப்பின் உள்ளே செல்லும் மின்னோட்டம் வெவ்வேறு தடைகளில் I₁, I₂, I₃ எனப் பிரிந்து செல்லும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> I = I_1 + I_2 + I_3 இங்கு ஒவ்வொரு தடையின் குறுக்கேயும், அதே மின்னழுத்தமே. உள்ளது. மின்னோட்டங்களை மின்னழுத்தம் மற்றும் தடைகளின் வழிக் குறிப்பிட்டால் I_1, I_2, I_3 \; I = E/R_1 + E/R_2 + E/R_3 = E/Rசமானம் பக்கவாட்டு இணைப்பிலுள்ள தடைகளின் மொத்த மதிப்பினை Rசமானம் என்று குறிப்பிடலாம். அதன் மதிப்பினைக் கீழ்க் காணும் முறையில் அடையலாம். மின் மூலங்கள். மின்னோக்கி, மின் கல அடுக்கு போன்ற மின் மூலங்கள் தொடர் நிலையிலோ, பக்கவாட்டு இணைப்பிலோ இணைக்கப் படலாம். தொடர் நிலை இணைப்பின் மின் சுற்றில் மின்னழுத்தம் கூடுகிறது. பக்கவாட்டு இணைப்பில், சுற்றின் மின்னோட்டத் திறன் கூடுகிறது. தொடர்–பக்கவாட்டு இணப்புகள். மேலும், தொடர் நிலை மற்றும் பக்கவாட்டு இணைப்புகளின் பல்வேறு சேர்க்கைகள் சிக்கலான சுற்றுகள் எனப் படும். ஒரு மூலம். ஒரே மின் மூலம் கொண்ட சுற்றுகள் எளிய தொடர் நிலைச் சுற்றாகக் குறைக்கப் படலாம். படம் 3 (2) இல் R₁, R₂இன் கூட்டு மதிப்பு இணைக்கப் பட்டு, பக்கவாட்டு இணைப்பிற்குப் பதில் Rசமானம் மதிப்புக் கொண்டாக ஒரே தொகுப்பாக மூலம் E மற்றும் தடைR₃ உடன் சமான தொடர் நிலை இணைப்பில் கருதப் படலாம். பல மூலங்கள். இரண்டு அல்லது மேற்பட்ட மூலங்கள் பல்வேறு கிளைகளில் கொண்ட சுற்றுகள் ஒரே தொடர் நிலைச் சுற்றாகக் கருதப் படாது. அடிப்படை விதிகளைக் கொண்டு, துணைச் சுற்று மின்னோட்டங்களை அறுதியிடலாம். துணைச் சுற்றுகளில் பாயும் மின்னோட்டங்கள் IA மற்றும் IB என்றால், அவற்றின் மதிப்புகளைக் கீழ்க் காணும் சமன்பாடுகளால் அறியலாம். E_1 = \big( R_1 + R_3 \big) I_A - R_1 I_B ; \quad - E_2 = - R_1 I_A + (R_1 + R_2) I_B திறன். ஒரு தடையில் வெப்பத் திறனாக மாற்றப் படும் மின் திறனின் மதிப்பு, அதில் காணும் மின்னழுத்தம் மற்றும் தடை இவற்றின் பெருக்குத் தொகையாகும். P = VI = V^2 / R = I^2 R மின் சுற்றின் துலங்கல். இது வரை கண்ட சுற்றுகள், மின்சாரம் பெறத் தொடங்கியது முதல் தொடர்ந்து ஒரே வகைத் துலங்களைத் தரும். . படம் 4 மற்றும் 5–இல் உள்ள சுற்றுகள் அத்தகைய துலங்களைத் தரா. படம் 4–இல் உள்ள திறப்பானை முதலில் மூடும் போது, தடை R ஆல் மட்டுப் படுத்தப் படும் மின்னோட்டம் முதலில் பாய்கிறது. மின் தேக்கி படிப் படியாக மின்னேற்பு பெறுகிறது. அதன் மின்னழுத்தம் மூலத்தின் மதிப்பிற்கு உயர்கிறது. அப்போது அதில் பாயும் மின்னோட்டம் t = \big[ \frac {E}{R} \big] e ^{\frac{-t}{RC ஆம்பியர். RC எனும் பெருக்குத் தொகை, மின் சுற்றின் நேர் மாறிலியாகும். மின் தேக்கியில் செலவாகும் மின்னாற்றல் W = CE^2 /2 படம் 5–இல் உள்ள மின் சுற்றில் திறப்பானை மூடும் போது உள்ள மின்னோட்டம் சுழி ஆகும். ட எனும் தூண்டம் கொண்ட சுருளின் வழியாகப் பாயும் மின்னோட்டம் மாறும் போது, அதன் வழியாக ஓர் எதிர் மின்னியக்கு விசையைத் தூண்டுகிறது. இறுதியாக இந்த மின்னியக்கு விசை மறைகிறது. நிலையான மின்னோட்டம் E/R மின் சுற்றின் வழியாகப் பாய்கிறது. திறப்பானை மூடிய பிறகு எந்தக் குறிப்பிட்ட நேரத்திலும் பாயும் மின்னோட்டம் i = \big[ \frac{E}{R} \big] \big(1 - E^{-Rt / L} \big) என்பது சுற்றின் கால மாறிலி. சுருளில் எந்த ஒரு நேரத்திலும் சேர்ந்து வைக்கப் பட்டுள்ள மின்னாற்றல் கீழ்க் காணும் சமன்பாட்டால் பெறப்படும். —எஸ். சுந்தரசீனிவாசன்