மாறும் உற்பத்திக் காரணிகளில் கூடுதலாக ஓர் அலகு சேர்க்கப்படுவதனால் மொத்த உற்பத்தியில் ஏற்படும் மாறுதலை, உற்பத்திப் பொருளின் அலகு அடிப்படையில் அளவிடுவது, இறுதிநிலைப் பொருள் உற்பத்தி எனப்படும். இறுதிநிலைப் பொருள் உற்பத்தியை, அதன் இறுதிநிலை வருவாயைக் (Marginal Revenue) கொண்டு பெருக்கினால் கிடைப்பது இறுதிநிலை வருவாய் உற்பத்தி (Marginal Revenue Product–MPP) ஆகும். ::MPP × MR = MRP :எனவே MRP = MPP × MR இறுதிநிலைப் பொருள் உற்பத்தியை அதன் மதிப்புக்கு ஈடான விலை அல்லது சராசரி வருவாயைக் கொண்டு பெருக்கினால் கிடைப்பது இறுதி நிலைப் பொருள் மதிப்பு (Value of Marginal Product–VMP) எனப்படும். அதாவது இறுதிநிலைப் பொருள் மதிப்பு ::VMP = MPP × P(AR) ::p = விலை ::AR = சராசரி வருவாய் அட்டவணை–1 பொருள் உற்பத்தியும் இறுதிநிலைப் பொருள் மதிப்பும் தூய போட்டியில் முற்றிலும் நெகிழ்ச்சியுடைய தேவை (Perfectly Elastic Demand} வளைகோடு காணப்படுமாகையால், அங்கு விலையும் இறுதிநிலை வருவாயும் (MR) சீராக (Equal) இருக்கும். படம்–1 இதனை விளக்குகிறது. முற்றுரிமைகளிலும் (Monopoly) நிறைகுறைப் போட்டிகளிலும் (Imperfect Competition) சராசரி விலை (தேவை வளைகோடு) கீழ் நோக்கிச் செல்லும். அதன் கீழ் இறுதிநிலை வளைகோடு செல்லும். அதனால், விளையும் இறுதிநிலை வருவாயும் சீராக இருப்பதில்லை (Not Equal). இவ்வங்காடிகளில் விலை இறுதிநிலை வருவாயை விடக் கூடுதலாக இருக்குமாகையால், இறுதிநிலை வருவாய் உற்பத்தி வளைகோடும் (MRP) இறுதிநிலைப் பொருள் மதிப்பு வளைகோட்டிற்குக் கீழ்ச் செல்லும், தூய போட்டியில் இறுதிநிலைப் பொருளின் மதிப்பும் இறுதிநிலை வருவாய் உற்பத்தியும் ஒரே பொருளை அளிக்கும். இவை நிறைகுறைப் போட்டியில் அவ்வாறில்லாமல் மாறுபடுகின்றன. இவற்றை இங்குக் கொடுக்கப்பட்டுள்ள படம்–1 & 2, அட்டவணை–1 ஆகியவை தெளிவாக விளக்குகின்றன. எஸ்.பெ.