பரிபாடலில் 15–ஆம் பாடலைப் பாடியவர். இவரும் புறப்பாடலைப் பாடிய இளம்பெரு வழுதியும் ஒருவராய் இருத்தல் கூடும் என்பார் உ.வே. சாமிநாதையர். பரிபாடலில் இவர் திருமாலைச் சிறப்பித்துப் பாடியிருப்பதில் வெளியாகும் சமயச் சார்பும், இரண்டு பாடல்களிலும் அமைந்த மொழி நடை, இலக்கியக் கட்டுக் கோப்பு ஆகியவற்றால் அறியலாகும் வேறுபாடும் இருவரையும் தனித்தனிப் புலவராகவே காட்டுகின்றன.