சென்னைத் தமிழ் இசைச் சங்கத்தார் சென்னையில் கட்டியுள்ள மண்டபம். செட்டிநாட்டு அரசர், அரசர் அண்ணாமலைச் செட்டியார் தமிழிசைக்குச் செய்த அரும்பணியின் நினைவாக எழுந்துள்ள இம்மண்டபம் தமிழர் கட்டிடக் கலைக்கு ஓர் எடுத்துக் காட்டு. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டுதோறும் தமிழிசைத் திருவிழாவும், பண் ஆராய்ச்சியும் நடைபெறும் இடம். தமிழிசையில் தலை சிறந்தோர்க்கு இசைப் பேரறிஞர் என்னும் பட்டம் அளித்துத் தமிழிசைச் சங்கம் பெருந்தொண்டாற்றி வருகிறது. இசை அரங்குகளும், நாடகங்களும் இங்கு ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகின்றன.