செவிப் பறைக் கிழிவு
cevip paṟaik kiḻivu
செவிப் பறை பல்வேறு வகைகளில் கிழிபடலாம்.
செவிப் பறை பல்வேறு வகைகளில் கிழிபடலாம். கொண்டை ஊசி, குச்சி, பென்சில் இவற்றால் காது குடையும் போது, செவிப் பறை கிழிந்து, துளை ஏற்படலாம். காதில் பலமாக அறையும் போதும், கடலில் முத்துக் குளிக்கும் போதும், விமானத்தை விரைவாகக் கீழே இறக்கும் போதும், நீரில் குதித்து மூழ்கும் போதும், அதிகக் காற்றழுத்தத்தால் செவிப் பறை கிழியக் கூடும். பலமான வேட்டுச் சத்தத்தாலும் செவிப் பறை கிழிய வாய்ப்புண்டு. தடுமன் இருக்கும் போது, தவறான முறையில் இரண்டு மூக்குப் பாதையையும் அடைத்துக் கொண்டு சிந்துவதால், நடுச் செவி அழுத்தம் கூடிச் செவிப் பறை கிழியும்.
தாங்க முடியாத வலி, குத்தல், இரைச்சல் தலைச் சுற்றலுடன், காதும் கேட்காமல் குருதி வடியலாம், வலியையும், மூக்கடைப்பையும் குறைக்க மருந்து தேவை. காதில் தூய பஞ்சு வைத்து மூட வேண்டும். நடுச் செவிப்பாதிப்பைத் தவிர்க்க, காதில் எண்ணெய், நீர் விடக் கூடாது. சொட்டு மருந்திடவும் கூடாது. —டி. எம். பரமேஸ்வரன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 908)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/chxfts7y/
தமிழ்“செவிப் பறைக் கிழிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/chxfts7y/APA
Oliyon Research. (2026). செவிப் பறைக் கிழிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/chxfts7y/MLA
"செவிப் பறைக் கிழிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/chxfts7y/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment