{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/chxfts7y/", "data": {"id": "chxfts7y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/chxfts7y/", "kind": "article", "headword": "செவிப் பறைக் கிழிவு", "romanization": "cevip paṟaik kiḻivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:01.202483+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "செவிப் பறை பல்வேறு வகைகளில் கிழிபடலாம்.", "body_ta": "செவிப் பறை பல்வேறு வகைகளில் கிழிபடலாம். கொண்டை ஊசி, குச்சி, பென்சில் இவற்றால் காது குடையும் போது, செவிப் பறை கிழிந்து, துளை ஏற்படலாம். காதில் பலமாக அறையும் போதும், கடலில் முத்துக் குளிக்கும் போதும், விமானத்தை விரைவாகக் கீழே இறக்கும் போதும், நீரில் குதித்து மூழ்கும் போதும், அதிகக் காற்றழுத்தத்தால் செவிப் பறை கிழியக் கூடும். பலமான வேட்டுச் சத்தத்தாலும் செவிப் பறை கிழிய வாய்ப்புண்டு. தடுமன் இருக்கும் போது, தவறான முறையில் இரண்டு மூக்குப் பாதையையும் அடைத்துக் கொண்டு சிந்துவதால், நடுச் செவி அழுத்தம் கூடிச் செவிப் பறை கிழியும்.\n\nதாங்க முடியாத வலி, குத்தல், இரைச்சல் தலைச் சுற்றலுடன், காதும் கேட்காமல் குருதி வடியலாம், வலியையும், மூக்கடைப்பையும் குறைக்க மருந்து தேவை. காதில் தூய பஞ்சு வைத்து மூட வேண்டும். நடுச் செவிப்பாதிப்பைத் தவிர்க்க, காதில் எண்ணெய், நீர் விடக் கூடாது. சொட்டு மருந்திடவும் கூடாது. —டி. எம். பரமேஸ்வரன்"}}