இனஒதுக்கல்
iṉaotukkal
குறிப்பிட்ட சில மக்களினங்களைச் சட்டத்தின் மூலமாகவும் சமூக மரபுகள் மூலமாகவும் தனிமைப்படுத்தப்படுதலே இன ஒதுக்கலாகும்.
குறிப்பிட்ட சில மக்களினங்களைச் சட்டத்தின் மூலமாகவும் சமூக மரபுகள் மூலமாகவும் தனிமைப்படுத்தப்படுதலே இன ஒதுக்கலாகும். இன ஒதுக்கலுக்குட்பட்ட மக்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட வாழிடத்திலேயே வாழவும், ஒதுக்கப்பட்ட ஒரு சில பள்ளிகள், திருச்சபைகள் (Churches), பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் முதலானவற்றையே பயன்படுத்தவும் வேண்டியவராக இருப்பர். அதிகாரம் மிகுந்த ஆட்சியாளர்கள் தம் பொருளாதார, சமூகத் தகுதிகளின் இடைவெளியைப் பாதுகாக்கப் பல விதிகளை மீது இனஒதுக்கக் குழுக்களின் திணிக்கின்றனர். இனங்களுக்கிடையேயும் மக்கள் குழுக்களிடையேயும் இனஒதுக்கல் முறை (Racial Segregation) காணப்படுவது, பல வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையிலானதாகும். மேற்கு ஆப்பிரிக்காவின் ஆங்கிலேய, பிரெஞ்சுப் பகுதிகளில் இனஒதுக்கல், சமூக வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் கட்டாயப்படுத்தப்பட்ட அமைப்பாக மாறிவிட்டது. நடு ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா முதலான நாடுகளில் ஒரே பகுதியில் பல்வேறு இனச் சமூகங்கள் பெருமளவில் வாழ்ந்து வருவதால், இன்றும் இன ஒதுக்கல் காணப்படுகிறது. தென்னாப்பிரிக்க, பிரிட்டோரிய அரசின் இனஒதுக்கல் கொள்கை நீண்டதொரு வரலாற்றினைக் கொண்டதாகும் (காண்க: இன ஒதுக்கீட்டுக் கொள்கை). பிற ஆப்பிரிக்கக் குடியேற்ற நாடுகளிலும் இனஒதுக்கல் சமூக, அரசியலமைப்புகளில் ஆழ்ந்து வேரூன்றிக் காணப்படுகிறது.
சமூகத் தடைகளையும் சட்டத் தடைகளையும் கைவிடாது செயற்படுத்தும் வெள்ளையர்களே இன ஒதுக்கக் கொள்கையைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகின்றனர். இருப்பினும், ஆசிய மங்கோல்கள் (Mongols), ஆப்பிரிக்கப் பண்டுக்கள் (Bantus), அமெரிக்க அசுதெக்குகள் (Aztec) ஆகியோரும் மக்களை வேறுபடுத்தி நடத்தும் இனஒதுக்க முறையினைச் செயற்படுத்தியவர்களாவர்.
மனிதர்களையும் மனிதக் குழுக்களையும் ஒதுக்கி விடுவது ஒரு சமூகத்தின் ஒருமைப்பாட்டைப் பாதிப்பதில்லை. பாகுபடுத்தப்படும் அல்லது ஒதுக்கப்படும் குழுக்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இந்தியச் சாதி முறையில், செய்யும் தொழிலையும் பிறப்பையும் அடிப்படையாகக் கொண்டமைந்த சாதிகள் படிநிலையைப் பார்க்கும் போது, ஒவ்வொரு சாதிக் குழுவும் தான் கொண்டுள்ள இடைவெளி, சமய மதிப்பீடுகளினால் (Religious Values) ஆனதாகும். இதன்வழி ஒவ்வொரு சாதிக் குழுவும் ஒரு தெளி- வான எல்லையைக் கொண்டு, சமூகத்தின் சமூக, சமய, பொருளாதார, அமைப்புகளில் வேறுபாடுகளுடைய பிணைப்புகளைப் பெற்றிருக்கிறது.
பழங்குடிகளிடையே காணப்படும் ஒதுக்கல் முறையானது சற்று மாறுபட்டதாகும். பண்பாடு, மொழி, சமயம், பொருளாதாரம் முதலிய அமைப்புகளில் ஒன்றுபட்ட ஒவ்வொரு பழங்குடியினரும் தனித்தனி இனக்குழுக்களாகவே (Ethnic Group) வாழ்ந்து வருகின்றனர். எனினும், பழங்குடிகளின் இன்றைய நிலை மாறுபட்டு வருகிறது. தொழிற் புகுத்தலாலும், பழங்குடி மறுவாழ்வுத் திட்டங்களாலும், பழங்குடிகள், ஏனைய மக்களுடன் கலந்துவாழ வகை செய்யப்படுகின்றனர். குடியேற்ற நாடுகளிலும் இதே நிலை காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் பல்வேறு இனச் சமூகங்களும் இனக் கலப்பு (Racial Amalgamation) அடைகின்றன.
அவாய் (Hawaii), பிரேசில் முதலான நாடுகளில் குடியேற்றம் பெற்ற சமூகங்களிடையே இனக்கலப்பு மிருந்துவிட்டதால் எப்போதாவது ஒருசில காலங்களில் மட்டுமே இனவேறுபாட்டுணர்ச்சி நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன. எனினும், சட்டத்தின் மூலம் மக்களை ஒதுக்கி வைக்கும் (Legal Segregation) முறை இல்லை.
அமெரிக்காவில் இனஒதுக்கல் முறை, இனம், இனத்தின் பூர்வீகம், சமயம், பண்பாடு முதலியவற்றால் அமையப் பெற்ற கலப்புக் கூறுகளால் ஆனதாகும். அமெரிக்க நாட்டின் வெள்ளை அமெரிக்கர்களுக்கும் கறுப்பின நீக்ரோவினருக்கும் காணப்படும் வகுப்பு வேறுபாடுகள், சமூகத்தின் பல செயற்பாடுகளிலும் வெளிப்படுவவைாகும். இனவேறுபாட்டுணர்ச்சி (Racial Prejudice) வலுப்பெற்றபோது அமெரிக்க நீதிமன்றம் அப்போதைய அதிகார வருக்கத்தினரால் ஏற்படுத்தப்பட்ட ‘ஒதுக்கு ஆனால் சமநிலையளி’ (Seperate but Equal) என்ற கருத்தைப் பல மாறுதல்களுக்கு உட்படுத்தியது.
இன ஒதுக்கலின்பால் உள்ள பல்வேறு கருத்துகளை அரசியலாரும் உலக மக்களும் 1960க்குப் பிறகு ஆழ்ந்து சிந்தித்தனர். பல்வேறுபட்ட இனக் குழுக்களிடையே இணக்கமும் ஒருமைப்பாடும் 1960 முதலே உருவாக்கப்பட்டன. உணவகங்கள், கடைகள் முதலான இடங்களில் ஒதுக்கலை நடைமுறைப்படுத்தும் சட்டங்களை அமெரிக்க அரசு விலக்கி, முன்னோடியாகத் திகழ்ந்தது. இதன்பிறகு நீக்கிரோக்கள் வாக்குரிமை பெறும் சட்டத்தை இயற்றியதும் அது இனக்குழுக்களிடையே இணக்கமும் ஒருமைப்பாடும் நிலவ வழிகோலியது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 571)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cgynzwmx/
தமிழ்“இனஒதுக்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cgynzwmx/APA
Oliyon Research. (2026). இனஒதுக்கல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cgynzwmx/MLA
"இனஒதுக்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cgynzwmx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment