இருந்தையூர்க் கொற்றன் புலவன்
iruntaiyūrk koṟṟaṉ pulavaṉ
கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர்.
கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் இயற்பெயர் கொற்றன் என்பதாகும். இவர் ஊர் இருந்தையூராக இருந்தமையால் இருந்தையூர்க் கொற்றன் புலவன் என்று அழைக்கப்பட்டார்.
இப்புலவர் பாடிய பாடல் குறுந்தொகை 335 ஆம் பாடலாக அமைந்துள்ளது. தலைவி இற்செறிக்கப்படுதலை உணர்த்திய தோழி, ‘அவள் ஊர் வெற்பிடை நண்ணியது’ என்றும், அவள் ‘வல்விற் கானவன் தங்கை’ என்றும் கூறி, இரவுக்குறி பெறுதற்கரிது என்பதைத் தலைவனுக்குப் புலப்பட வைக்கிறாள்.
மலைவளமும் சுனைவளமும் மகளிர் நீர் விளையாட்டும் மந்திகள் குட்டிகளோடு செய்யும் தந்திரச் செயல்களும் இப்பாடலில் சுவைபடப் புனையப்பட்டுள்ளன. ஊர் வெற்பிடை நண்ணியது என்றதனால் தலைவி அடைதற்கரிய இடத்தினில் உள்ளாள் என்பதையும், கொடிய கானவர் தங்கையென்றமையால் அக்கானவர் அறியின் தீங்கு நிகழும் என்பதையும் தலைவனிடம் தோழி குறிப்பாற் புலப்படுத்தி, வரைவு கடாவும் திறம் பாராட்டத்தக்கதாகும். ஈ.வே.மா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 202)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cg8ebp8g/
தமிழ்“இருந்தையூர்க் கொற்றன் புலவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cg8ebp8g/APA
Oliyon Research. (2026). இருந்தையூர்க் கொற்றன் புலவன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cg8ebp8g/MLA
"இருந்தையூர்க் கொற்றன் புலவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cg8ebp8g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment