பல படிகங்களில் காணப் படும் நீரைப் படிக நீர் எனலாம். நீரின் மின் கடத்தாப் பொருள் மாறிலியின் பிறவற்றுடன் ஒப்பிடும் போது, இது மிகவும் அதிகம். எனவே, ஓர் உப்பின் நீர்க் கரைசலில் நேர், எதிர் அயனிகளைச் சுற்றிலும் நீர் மூலக் கூறுகள் காணப் படுகின்றன. நேர் அயனிகளுக்கும், நீர் மூலக் கூறுகளுக்கும் இடையே நிலவும் அதிக ஈர்ப்பு விசை காரணமாகப் படிகங்களின் உள்ளேயும், நீர் மூலக் கூறுகள் காணப் படுகின்றன. இவை படிகங்களின் பல விதமாக அமைக்கின்றன. சில படிகங்களின் நீர் மூலக் கூறுகள் மைய அணுவுடன் சக பிணைப்பு முறையில் இணைக்கப் படுகின்றன. இவற்றின் நேர் மற்றும் எதிர் அயனிகளைச் சூழ்ந்துள்ள நீர் மூலக் கூறுகள் ஹைட்ரஜன் பிணைப்பால் பிணைக்கப் படுகின்றன. வேறு சில படிகங்களின் அமைப்பில் காணப் படும் வெற்றிடங்களை நீர் மூலக் கூறுகள் நிரப்புகின்றன. படிக வடிவத்திற்கும், சில படிகங்களின் நிறங்களுக்கும் இப்படிக நீரே காரணமாக அமைகிறது. சோடியம் குளோரைடு, காரீய ஹைட்ரேட் போன்ற சில படிகங்களில் படிக நீரே இல்லை. x-smaller|Ni \big( NO_3 \big)_2 \cdot 6H_2O; Zn \big( Br O_3 \big)_2 \cdot 6H_2O; \big[ M^{+} \big( H_2O\big)_6 \big]^{++} \cdot - \big(M^{+}=Mg \cdot Mn \cdot Zn \cdot Ni \big) போன்ற படிகங்களின் நீர் மூலக் கூறுகள் உலோக மூலக் கூறுகளுடன் சக பிணைப்பால் பிணைக்கப் பட்டுள்ளன. CuSO₄.5H₂O படிகம் நீல நிறமுடையது. இதில் நான்கு நீர் மூலக் கூறுகள் தாமிர அயனியுடன், அணைவுச் சேர்மங்களில் (Complex Compounds) காணப் படும் ஈதல் சக பிணைப்பு (Co-ordinate Vlaency ) மூலம் இணைக்கப் பட்டுள்ளன. எஞ்சிய ஒரு நீர் மூலக் கூறு சல்பேட் எதிர் அயனியுடன் இணைக்கப் பட்டுள்ளது. இவ்விரு வகை நீர் மூலக் கூறுகள் ஹைடிரஜன் பிணைப்பால் இணைக்கப் பட்டுள்ளன. தாமிர சல்ஃபேட்டின் அமைப்பைப் பின் வருமாறு காட்டலாம். பொது வாய்ப்பாடு M^{I}M^{II} \big(SO_4 \big)_2 \cdot 12 H_2O கொண்டுள்ள படிகாரங்களிலும்(alumns: எ.டு: KAI(SO,),.12H,O) இவ்வகையிலேயே நீர் மூலக் கூறுகள் அமைந்துள்ளன.M¹ஐச் சுற்றி M'ஜச் சுற்றி ஆறு மூலக் கூறுகளும் உள்ளன. இவ்வகை நீர் மூலக் கூறுகளிடையே ஹைட்ரஜன் பிணைப்பு காணப் படுகிறது. KAUBr₄ .2H₂O என்னும் படிகத்திலும், சியோலைட் போன்ற சிலிக்கேட் கனிமங்கள், சில வகைக் கனிமங்கள் (clays) உலோக ஆக்சைடுகள் ஆகியவற்றின் நீர் மூலக் கூறுகள், எந்த அயனியுடன் இணைந்து காணப் படுவதில்லை. மாறாக, அப்படிகங்களின் (Lattice points) அணிக் கோவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்பும் நடுநிலை மூலக் கூறுகளாக நீர் காணப் படுகிறது. எனவே, படிக நீர் ஒரு சில படிகங்களில் மாறாத அளவிலும், வேறு சிலவற்றில் வெவ்வேறான அளவிலும் உள்ளது. படிக நீர் பெற்றுள்ள படிகங்கள் இரு மாறுபாடான பண்புகளைப் பெற்றுள்ளன. அவை: தூள் பூக்கும் தன்மை (efflorescence), நீரை உறிஞ்சிக் கசிவுறுந் தன்மை (deliquescence) என்பன. படிகங்களில் உள்ள படிக நீரைப் படிகங்கள் தன்னியல்பாக இழத்தலைத் தூள் பூத்தல் எனலாம். படிகங்களின் புறப் பரப்பில் உள்ள பகுதி நீரழுத்தம் (partial pressure) காற்றில் நீரின் பகுதி அழுத்தத்தை விட மிகுந்தால், தூள் பூத்தல் நிகழும். கிளாபேர் உப்பு (Glauber's salt) எனப் படும். Na₂SO₄.10H₂O படிக உப்பு 25°C இலும் 19.4 மி.மீ. அழுத்தத்திலும் படிக நீர் அனைத்தையும் முழுமையாக இழக்கிறது. தூள் பூத்தலால், படிகங்கள் நொறுங்கு பொருளாகச் சிதைவடைவதுடன், நிறம் உடையனவாயின், அந்நிறத்தையும் இழக்கின்றன. நீர் உறிஞ்சிக் கசிவுறுதல் அல்லது நிறக் கசிதல். வளி மண்டலக் காற்றிலுள்ள நீரைப் படிகங்கள் தன்னியல்பாக உறிஞ்சி, அந்நீரில் கரைந்து தெவிட்டாத கரைசலாக மாறுதல் நீர்க் கசிதல் எனப் படுகிறது. காற்றில் நீரின் பகுதி அழுத்தம், அப்பொருளின் தெவிட்டிய கரைசலில் உள்ள நீரின் பகுதி அழுத்தத்தை விட மிகுந்தால், செயல் நிகழும். கால்சியம் குளோரைடு (CaCl₂. 6H₂O), துத்தநாகம் குளோரைடு (ZnC1₂.6H₂O) மற்றும் சில நைட்டிரேட்டுக்கள் இப்பண்பைப் பெற்றுள்ளன. படிக அணிக் கோவையில் ஆவி நீர் பரவும் தன்மையைப் பொறுத்தும், படிகத்தின் உருவ அமைப்பைப் பொறுத்தும் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. காற்றில் நீரின் பகுதி அழுத்தமும், தெவிட்டிய கரைசலின் நீரின் பகுதி அழுத்தமும் சமமாகும் வரை இவ்வினை நிகழும். எளிதில் கரையும் படிகங்கள் நீரில் கசியும் பண்புடையவை. 25°C வெப்ப நிலையில், தூய நீரின் ஆவி அழுத்தம் 23.8 மி.மீ. ஆகும். ஆனால், கால்சியம் குளோரைடு, துத்தநாக குளோரைடு முதலியவற்றின் தெவிட்டிய கரைசல்களில் நீரின் ஆவி அழுத்தம் முறையே 7.00 மி.மீ, 2.00 மி.மீ. ஆகும். நீர்க் கசியும் பொருள்கள் காற்றிலிருந்து நீரை நீக்கப் பயன் படுகின்றன. இத்தன்மைகள் படிகங்களைப் பொறுத்ததல்ல. காற்று நீரின் பகுதி அழுத்தத்தையும், ஈரத் தன்மையையும் பொறுத்தது. எடுத்துக் காட்டாக, தூள் பூக்கும் தன்மை யுடைய Na₂SO₄ .10H₂O உப்பு 25°C வெப்ப நிலையில், காற்றின் ஒப்பு ஈரத் தன்மை 81-92% வரை இருக்க, இது நிலைத் தன்மை (relative humidity) பெறுகிறது. ஆனால், ஒப்பு ஈரத் தன்மை 91% குறைவாக இருக்க, தூள் பூக்கும் பண்பைப் பெறுகின்றது. 92%ஐ விட மிகுதியாக இருக்குமானால், நீர் கசியும் தன்மையைப் பெறுகிறது. —இரா. விசுவநாதன் துணை நூல். Samuel Glasstone, Text book of Physical Chemistry, The Macmillan Press Ltd., London, 1980.