சாய்வரிக் கம்பளித் துணி
cāyvarik kampaḷit tuṇi
நன்கு முறுக்கப்பட்ட கம்பளி, பருத்தித் துணி ஆகியன மிதமான எடையுடன் மேல் நோக்கி இரண்டும் கீழ் நோக்கி இரண்டுமாக, 45° கோணத்தில் குறுக்கு வாட்டத்தில் அமைந்தது இருபடைத் துணி (twill) ஆகும்.
நன்கு முறுக்கப்பட்ட கம்பளி, பருத்தித் துணி ஆகியன மிதமான எடையுடன் மேல் நோக்கி இரண்டும் கீழ் நோக்கி இரண்டுமாக, 45° கோணத்தில் குறுக்கு வாட்டத்தில் அமைந்தது இருபடைத் துணி (twill) ஆகும். பொதுவாக முழுச்சீர் செய்தலும், எப்போதாவது பகுதிச்சீர் செய்தலும் (semi finish) கொண்டது. இருபடை வகை அமைப்பு முன்புறமும், பின்புறமும் நன்கு தெரியும்; பல வனககளில் தயாரிப்பதற்கு இது ஏற்றது. துவளுந்தன்மை மிக்கதாகையால், உடலுடன் ஒட்டி எடுப்பான தோற்ற உருவத்தைக் கொடுக்கக் கூடியது, இத்துணியில் மெல்ல மெல்ல உருவாகும் பளபளப்பை அகற்ற முடியாது. ஏனைய கம்பளித் துணிகளைப் போன்று சாய்வரிக் கம்பளித் துணி (serge) வலஞ்சுழி இருபடை அமைப்புக் கொண்டது. —மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. B.P. Corbman, Textiles - Fibre to Fabric, Sixth Edition, McGraw-Hill Book Company, New York, 1985.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 64)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ceskmvx3/
தமிழ்“சாய்வரிக் கம்பளித் துணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ceskmvx3/APA
Oliyon Research. (2026). சாய்வரிக் கம்பளித் துணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ceskmvx3/MLA
"சாய்வரிக் கம்பளித் துணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ceskmvx3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment